உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னார் தொடருந்துப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார் தொடருந்துப் பாதை
Mannar Line
கண்ணோட்டம்
நிலைதலைமன்னார் வரை இயங்குகிறது.
உரிமையாளர்இலங்கை தொடருந்து போக்குவரத்து
முனையங்கள்
நிலையங்கள்11
சேவை
வகைபிராந்தியத் தொடருந்துப் போக்குவரத்து
அமைப்புஇலங்கை தொடருந்து போக்குவரத்து
செய்குநர்(கள்)இலங்கை தொடருந்து போக்குவரத்து
வரலாறு
திறக்கப்பட்டது1914
மீண்டும் திறக்கப்பட்டது14 மார்ச் 2015
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்106 km (66 mi)
தட அளவி1,676 மிமீ (5 அடி 6 அங்)
வழி வரைபடம்
மன்னார் பாதை
Head station
தலைமன்னார்
Station on track
மன்னார்
Unknown route-map component "hKRZWae"
மன்னார் வளைகுடா
Stop on track
முருங்கன்
Stop on track
மடு வீதி
Stop on track
செட்டிக்குளம்
Stop on track
நேரியகுளம்
Straight track Continuation backward
வடக்குப் பாதை காங்கேசன்துறை நோக்கி
One way leftward Unknown route-map component "ABZg+r"
மதவாச்சி சந்தி
Continuation forward
வடக்குப் பாதை கொழும்பு கோட்டை நோக்கி

மன்னார் தொடருந்துப் பாதை (Mannar Line) என்பது இலங்கையின் உள்ள ஒரு தொடருந்துப் பாதை ஆகும். இது வடக்குப் பாதையில் இருந்து மதவாச்சி சந்தியில் இருந்து பிரிந்து வட-மேற்கே வட மத்திய, மற்றும் வடக்கு மாகாணங்களுக்கூடாக சென்று தலைமன்னாரில் முடிவடைகின்றது. 106 கிமீ (66 மைல்) நீளமான இப்பாதையில் 11 தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.[1] இப்பாதை முதன் முதலாக 1914 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடருந்துப் பாதை ஒன்றை அமைக்கும் திட்டத்தில் மன்னார் பாதை திறக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 22 மைல் நீளப் பாலம் ஒன்று அமைப்பதற்காக மதராசு ரெயில்வே பொறியாளர்களால் 1894 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கான தொழினுட்ப அச்சுப்படி வரையப்பட்டு, செலவுப் பகுப்பாய்வும் செய்யப்பட்டது. மன்னார் தீவில் அமைந்துள்ள தலைமன்னாரையும் இலங்கைப் பெரும் பரப்பையும் இணைக்கும் மன்னார் பாதை 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தியப் பகுதியில் தனுஷ்கோடி வரை தொடருந்துப் பாதை நீடிக்கப்பட்டது. ஆனாலும் இரு நாடுகளையும் இணைக்கும் பன்னாட்டுத் தொடருந்துப் பாலம் நிர்மாணிக்கப்படவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistics - Sri Lanka Railways". Ministry of Transport, Sri Lanka.
  2. "The Rail Routes of Sri Lanka". Infolanka.com.
  3. http://infolanka.asia/sri-lanka/transport/the-indo-lanka-land-bridge-reviving-the-proposal பரணிடப்பட்டது 2016-01-20 at the வந்தவழி இயந்திரம் The Indo-Lanka Land bridge: Reviving the Proposal