உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராணி திவ்யா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராணி திவ்யா சிங் Maharani Divya Singh
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னையவர்கிருசுணேந்திர கௌர் (தீபா)
பின்னவர்கே. நட்வர் சிங்
தொகுதிபரத்பூர், இராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1963-11-06)6 நவம்பர் 1963
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்விசுவேந்திர சிங்
பிள்ளைகள்யுவராச்சு அனிருத்தா பரத்பூர்
தொழில்அரசியல்வாதி

மகாராணி திவ்யா சிங் (Maharani Divya Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் என்று அறியப்படுகிறார். பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மகாராணி திவ்யா சிங் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் இலக்னோவில் பிறந்தார். பிப்ரவரி 15, 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் மகாராச்சு விசுவேந்திர சிங்கை மணந்தார். [1]

கல்வி & தொழில்[தொகு]

இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் திவ்யா கலை பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் பரத்பூர் மாவட்ட மன்றத்தில் உறுப்பினரானார். பின்னர், 11 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2012 ஆம் ஆண்டில் திவ்யா தனிப்பட்ட காரணங்களுக்காக 2011 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இராசத்தான் பொது சேவை ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 11th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  2. "Congress-Jat rift widens in Rajasthan: Bharatpur's Maharani Divya Singh quits Rajasthan Public Service Commission".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராணி_திவ்யா_சிங்&oldid=3885904" இலிருந்து மீள்விக்கப்பட்டது