உள்ளடக்கத்துக்குச் செல்

பொய் மான் கரடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய் மான் கரடு என்பது தமிழகத்தின், சேலம் மாநகரித்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனைமரத்துப்பட்டி அருகே அமைந்துள்ள ஒரு இடமாகும். சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி உள்ள மலைத்தொடரில் இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள ஓரு குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது . இந்த மலைத்தொடர் குகைக்கு அருகில் சென்று பார்த்தால் மான் எதுவும் இருக்காது. இது ஒரு பொய் தோற்றமாகும். சேலம் நகரிலுள்ள இந்த இடம் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றம் பெற்றுள்ளது.

இதுகுறித்து நிலவும் கதை[தொகு]

இராமனையும் சீதையையும் பிரிக்கும் என்னத்துடன் மானாக உருமாறிவந்தான் மாரீசன். அந்த மானைக் கண்டு சீதை அதைப் பிடித்துத் தர இராமனை வேண்டினாள். அவளின் ஆசையை நிறைவேற்ற அந்த மானை இராமன் விரட்டிச் சென்ற இராமன் அந்த மாரீசனாகிய மானைக் சென்றான். பிறகு மாரீசன் என்று உணர்ந்த இராமன் மானுக்கு இந்த கரட்டில் மோட்சம் அளித்ததாக ஒரு கதை இங்கு உண்டு.[1]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

பொய்மான் கரடு என்ற பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு கதை எழுதப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. சோமலெ (1961). சேலம் மாவட்டம். சென்னை: பாரி நிலையம். p. 138.
  • "Salem". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007
  • Salem, Tamil Nadu travel guide from Wikivoyage
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்_மான்_கரடு&oldid=2729322" இலிருந்து மீள்விக்கப்பட்டது