பேச்சு:2015 வடகிழக்குப் பருவமழைக் காலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2015 தென்னிந்திய வெள்ளங்கள் என்று தலைப்பை மாற்றலாம். en:2015 South Indian floods பார்க்கவும். --இரவி (பேச்சு) 17:46, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

2015 வடகிழக்கு பருவமழைக் காலம் எனும் கட்டுரையினை துவக்கியதன் நோக்கம் வேறு. எனவே இந்தக் கட்டுரையினை இப்போதைக்கு அப்படியே விட்டு வைப்போம். en:2015 South Indian floods என்பதற்கு இணையான தமிழ்க் கட்டுரை அப்படியே இருக்கட்டும். அதில் வெள்ளங்கள் குறித்த தகவல்களை சேர்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
"2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்" என்ற கட்டுரையுடன் இணைப்பதே சரி. --AntanO 08:11, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நிலைப்பாட்டு விளக்கம்[தொகு]

  • இயற்கை ஆர்வலனாக இருப்பதால், இந்தாண்டின் வடகிழக்கு பருவமழை குறித்து பதிவு செய்யும் நோக்கில் இக்கட்டுரையைத் துவக்கினேன். வெள்ளங்கள் குறித்து இன்னொரு பயனர் கட்டுரையைத் தொடங்கியதை அடுத்து, இங்கு எழுதப்பட்டுள்ள (பாதிப்பு குறித்த) தகவல்களை அக்கட்டுரையில் சேர்ப்பதே உகந்தது என்று எண்ணினேன்; அதன்படி செய்துள்ளேன்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் பெய்த மழையளவுகள் குறித்த தகவல்களை வரைபடங்களுடன் தருவதோடு, அதிகப்படியான மழைக்கான காரணங்களை பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரையினை வளர்த்தெடுப்பேன்; டிசம்பர் இறுதிக்குள் இது நடக்கும். அதற்குப் பிறகு விக்கி குமுகாயம் பார்வையிட்டு, தேவையற்ற கட்டுரை எனில் நாம் நீக்கி விடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:22, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
சரி, மா. செல்வசிவகுருநாதன். இக்கட்டுரையைத் தொடர்ந்து வளர்த்தெடுங்கள். வெள்ளப் பாதிப்பு குறித்த தகவலை 2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் கட்டுரையில் திரட்டுவோம்.--இரவி (பேச்சு) 11:07, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி, இரவி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:05, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

எனது முந்தையக் கோரிக்கையினை இப்போது பரிசீலிக்கவும். 2015 வடகிழக்குப் பருவமழைக் காலம் எனும் கட்டுரையினை தனிக் கட்டுரையாக வைத்திருக்க விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இரவி, கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. கட்டுரைகள் ஒன்றிணைப்பு, தலைப்பு மாற்றம் குறித்த வார்ப்புருக்களை நீக்கி இருக்கிறேன். கவனிக்க: @Selvasivagurunathan m:--இரவி (பேச்சு) 05:29, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

I am sorry to write in English due technical issues. The title is about Tamilnadu related article. Therefore it is better to merge with "தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)". BTW, have a look for notable issues that I express at பேச்சு:2016 வடகிழக்குப் பருவமழைக் காலம். --~AntanO4task (பேச்சு) 11:10, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஏற்கனவே முறைப்படி உரையாடி, இணைப்பு தேவையில்லை என முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழகம் குறித்த கட்டுரை என்பதால், இக்கட்டுரைக்கு குறிப்பிடத்தக்கமை உள்ளது; தனிக் கட்டுரையாக இருக்கவும் தகுதி இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:05, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
எங்கு முடிவு எட்டப்பட்டது? தமிழகம் குறித்த கட்டுரை என்பதால் எப்படி குறிப்பிடத்தக்கமையாகும்? தனிக் கட்டுரையாக இருக்கவும் எவ்வாறு தகுதி உள்ளது? பொதுவாக உரையாடாது பொருளுடன் உரையாடுவது ஏற்றது. பார்க்கவும் பேச்சு:2016 வடகிழக்குப் பருவமழைக் காலம் --~AntanO4task (பேச்சு) 03:17, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
இந்தப் பேச்சுப் பக்கத்திலுள்ள முந்தைய தலைப்பினைப் பார்க்கவும். பராமரிப்பு வார்ப்புருக்களை நான் நீக்கவில்லை. இது தமிழ் விக்கிப்பீடியா; தமிழ் பேசப்படும் தமிழகம் சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை என்பதால்... குறிப்பிடத்தக்கமையும், தகுதியும் உள்ளது. பொதுவாக உரையாடவில்லை; பேச்சு:2016 வடகிழக்குப் பருவமழைக் காலம் பக்கத்தை பார்த்துவிட்டுத்தான் அங்கும் இங்கும் எனது பதிலைத் தந்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Ravidreams: இந்தாண்டு அக்டோபர் இறுதியில் எழுப்பப்பட்ட இணைப்புக் கோரிக்கை, அதனைத் தொடர்ந்து நான் தந்த விளக்கங்கள் இவற்றைப் படித்து ஒரு முடிவு சொல்லுங்கள். முடிவு எட்டப்பட்டது என நான் பதில் கூற, எங்கு எட்டப்பட்டது என மீண்டும் கேள்வி எழுப்பப்பட... அதற்கும் நான் உரிய பதிலைத் தந்தேன். கேள்விக்குறியாகவே எத்தனைக் கட்டுரைகளை விட்டுவைப்பது? உங்களால் தீர்க்க முடியுமா எனப் பாருங்கள். அல்லது வாக்கெடுப்பு நடத்தவும் ஒப்புக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
காண்க: பேச்சு:2016 வடகிழக்குப் பருவமழைக் காலம் --~AntanO4task (பேச்சு) 06:07, 14 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]