பேச்சு:மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சீவி சிவகுமார், இக்கட்டுரையை நான் திருத்த உள்ளேன். திருந்தங்கள் பொருந்தாதன என்றால் அருள்கூர்ந்து தெரிவியுங்கள். --செல்வா 00:21, 28 மே 2011 (UTC)[பதிலளி]

செல்வா. நல்ல தமிழ்ப் பதங்கள் பயன்படுத்துதல் குறித்த உங்கள் முனைப்பு பாராட்டுக்குரியது. ஆயினும் எனது கீழ்வரும் கருத்தை ஆலமரத்தடியில் முன்வைக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.ஆயினும் இங்கு கூறுவதும் பொருந்த்தும் என நினைக்கிறேன். பல அறிவியல் மற்றும் துறைசார் விடயங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திசைச் சொற்களுக்கு அல்லது தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக புதிய சொற்களை (சில முன்னுள்ளதை விட மிகப் பொருந்துவதாயிருக்கின்றன) விக்கியில் ஆக்கிப் பயன்படுத்தமுனைகிறோம். பல உயிரியல் மருத்துவக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டன. கல்வி நோக்கில் பாடசாலைக் கலைத்திட்டங்களிலும் நூல்களிலும் ஏற்கனவே பயன்பட்டில் உள்ள சொற்களுடன் இவை குழப்பத்தைத் தரும் அல்லவா? மாணவர்களால் சிலவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாதிருக்கும்.விக்கி நீண்ட காலத்திட்டம் உடனடியாக மாணவர்கள் புரிந்து கொள்ளமுடியாமைக்காக மாற்றங்களை செய்யாத்திருப்பது சரியாகாது என்பதும் புரிகிறது. கலைத்திட்டங்களிலும் நடைமுறைப் பயன்பட்டிலும் மாற்றங்களைச் செய்ய முனையாது, விக்கியில் மட்டும் மாற்றுவதிலும் உறுத்தல் உள்ளதல்லவா?

இந்தக் கட்டுரையில் மின்கடத்தாறு, மின் கடத்துமை என்பன பொருத்தமானதே. நன்றி. --சஞ்சீவி சிவகுமார் 23:09, 28 மே 2011 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார், இந்தக் கலைச்சொல் சீர்மையில் பல குழப்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலேயே கூட பாடத்துக்குப் பாடம் கலைச்சொற்கள் மாறுபடுகின்ற்ன! வழக்கில் உள்ள சொற்களைப் பிறைக்குறிகளுக்குள் தரலாம். Resistor, Resistance, Resistivity ஆகிய மூன்றையும் அது போல் capacitor, capacitance, permittivity; inductor, inductance, permeability போன்றவற்றையும் சீராகக் குறிக்க வேண்டும். திறன் என்னும் பின்னொட்டு தமிழில் power, efficiency, போன்றவற்றுக்கும் பயன்படுத்துவதால் குழப்பம் ஏற்படுகின்றது. இந்த -ity என்று முடியும் சொற்கள் ability போன்ற திறனைக் குறிக்கும் என்றாலும், இங்கே அப்பொருள்களின் அடிப்படைப் பண்பைக் குறிக்கும். ஒரு பொருளால் செய்யப்பட்ட ஒரு மின்தடையி, அதன் தடைமம் (resitance R) என்னவாக இருந்தாலும் அதனோடு அதன் குறுக்கு வெட்டுப்பரப்பைப் பெருக்கி (அந்தக் குறுக்குவெட்டுப் பரப்பு என்னவாக இருந்தாலும்), பின்னர் அந்தத் தடையியின் நீளத்தால் வகுத்தால் (அந்த நீளம் என்னவாக இருந்தாலும்),அப்பொருளால் செய்த எந்தத் தடையியிக்கும் ஒரே ஓர் எண்தான் கிட்டும். இது அப்பொருளின் மாறா மின் பண்பு (ஒரு குறிப்பிட்ட வெப்ப, சூழழுத்தச் சூழலில்). எனவே இது அப்பொருளின் அடிப்படைப் பண்பு. ஆகவே "மை" விகுதி. தடைமை (தடை எழுப்புமை என்னும் பண்பு). மின்தடைமை. மின்தடைத்திறன் என்பதனையும் கூடவே குறித்துள்ளேன். இலங்கை, தமிழ்நாடு, கேரளா, வேறு பிற இடங்களிலும் வழங்கும் பாடநூல் கலைச்சொற்களை இங்கு இட்டு கலந்து பேசி, சீராக விக்கியில் ஆளலாம். மற்ற சொற்களைப் பிறைக்குறிகளுக்குள் தந்து உதவலாம். --செல்வா 16:42, 30 மே 2011 (UTC)[பதிலளி]
  • மின்தடை = electrical resistor
  • மின்தடைமம் = electrical resistance
  • மின்தடைமை = electrical resistivity
என்பன என் பரிந்துரை. இவற்றை எற்கனவே உள்ள கலைச்சொற்களோடு எப்படிச் சீராகப் பயன்படுத்தலாம் என்று கூறுங்கள். தமிழ் விக்கியில் எல்லா இடங்களிலும் ஒரே சீராக கலைச்சொல்லாட்சி இருப்பது மிகவும் நல்லது. தமிழ்நாடு-இலங்கை-கேரளா தமிழ்க்கலைச்சொற்களிடையே சீரொருமை பெறுதல் தேவையாய் உள்ளது.--செல்வா 16:49, 30 மே 2011 (UTC)[பதிலளி]
செல்வா, தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள். எங்கனும் ஒரே தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் கருத்தில் நான் மிக உடன்பாடுகொண்டுள்ளேன். இந்த முன்னெடுப்பை செயல்வடிவப் படுத்த விக்கிக்கு வெளியிலும் நாம் செயற்பட்டாக வேண்டும். உங்களது மேலுள்ள குறிப்பிலிருந்தே நான் மிகக் கற்றுக் கொள்ளக்கூடியதாயிருந்தது. கலைச்சொல்லாக்கம், அதன் சீரொருமை, அதனை நடைமுறைப் படுத்தல் என்பன மிகப்பெரிய செய்யவேண்டிய பணிகளாகத்தெரிகின்றன. இயற்பியல் குறித்த கட்டுரைகள் த.வியில் போதாதுள்ளது. நீங்கள் இத்துறை சார்ந்தவராயிருப்பது வலுவூட்டும்.

மேலுள்ள கட்டுரையில் மின் வன் கடத்தி என்பது வலிமையான கடத்தி super conducter ஐத்தான் குறிக்கும் காவலியைக் குறிக்காது அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் 04:01, 31 மே 2011 (UTC)[பதிலளி]