பேச்சு:மகாதேசாதிபதி (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Dominion of Ceylon இங்குள்ள பட்டியலில் சோல்பரிக்கு முன்னரே ஒருவர் கவர்னர் ஜெனரலாக இருந்திருப்பதாக போட்டுள்ளதே?--சோடாபாட்டில்உரையாடுக 01:34, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

en:Governor-General of Ceylon கட்டுரையில் தரப்பட்டுள்ளது சரியெனவே தெரிகிறது. அத்துடன் en:British governors of Ceylon என்ற கட்டுரையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 02:06, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
Kanags /சோடாபாட்டில் பெப்ரவரி 04 1948ல் இலங்கை சுதந்திரமடையும்போது இலங்கையின் தேசாதிபதியாக இருந்தவர் சேர். ஹென்றி மொங்-மேசன் மோர் என்பவரே. இவர் சுதந்திரத்துக்கு முன்பே தேசாதிபதியாக பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 6 ஜுலை 1949ல் நிறைவடைந்தது. அதுவரை இலங்கையின் தேசாதிபதியாகவே அவர் பணியாற்றினார். இவரின் பதவிக்காலம் முடிந்த பின்பு இலங்கை பிரதமரின் சிபாரிசின் பேரில் பிரித்தானிய முடி 6 ஜுலை 1949ல் சோல்பரி அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்த சோல்பரி பிரபுவை முதலாவது மகாதேசாதிபதியாக நியமித்தது. இவரின் பதவிக்காலம் 17 ஜுலை 1954ல் நிறைவடைந்தது. எனவே, பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட முதலாவது மகாதேசாதிபதியாக சோல்பரி பிரபு விளங்குகின்றார். இதற்கமைய திருத்தத்தை சேர்த்துள்ளேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--P.M.Puniyameen 04:23, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]