பேச்சு:திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வரலாறு[தொகு]

மிழலை சங்ககால ஊர். இதனைச் சூழ்ந்த பகுதி மிழலைக் கூற்றம் எனக் கல்வெட்டுகளில் உள்ளது. மிழலையில் கோயில் உள்ளது. அப்பர் காலம். ஊர் முந்தியது. சங்ககால வரலாறு முந்தியது. கோயில் பிந்தியது. வரலாற்றுப் பார்வை தமிழ் விக்கியில் குறைந்துவருகிறது. வழிபாட்டுக்கு முதன்மை தந்து வரலாறு பின் தள்ளப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய விக்கி நிலை. இது தமிழின் தலைவிதியா, தமிழனின் தலைவிதியா எனப் புரியவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 20:33, 11 செப்டம்பர் 2013 (UTC)

26 பிப்ரவரி 2017[தொகு]

26 பிப்ரவரி 2017 அன்று கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணைக்கப்பட்டன. தமிழகக் கட்டுமான நுணுக்கத்தின் முக்கியத்துவம் கருதி வவ்வால் நத்தி மண்டபம் புகைப்படங்கள் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. கூடுதல் விவரங்கள் பெறப்பட்டு, பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:26, 26 மே 2017 (UTC)[பதிலளி]