பேச்சு:தமிழர் அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு[தொகு]

ஐரோப்பிய மொழிகளில் கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் எப்போது, எவ்வாறு எப்படித் தோன்றின என்று அறிதல் வேண்டும். எகிப்திய மொழியில் இருந்து கிரேக்கர்களும், கிரேக்கத்தில் இருந்து அரபு மொழியிலும், அரபு மொழியில் இருந்து இலத்தீனிலும், கடைசியாக இலத்தீனில் இருந்து ஐரோப்பிய மொழிகளிலும் கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு வளர்ந்தன. அவர்கள் யாவரும் தத்தம் மொழிகளிலும் புதிய நூல்களும் இயற்றினர். இன்னும் சமசுகிருதம், உருசிய மொழி, என்று எத்தனையோ மொழிகளில் தோன்றி வளர்ந்த வரலாறுகளும் அறிய வேண்டும். குறிப்பாக தமிழ் மொழியில் இருந்த நூல்கள் பற்றியும் அறிய வேண்டும். பிற ஐரோப்பிய மொழிகளில் - செக், அங்கேரிய, போலந்திய மொழி போன்றவற்றில் - என்னென்ன நூல்கள் இருந்தன அவற்றின் பங்கு என்ன என்று அறிதல் வேண்டும். நிப்பானிய, சீன, கொரிய மொழிகளில் வளர்ச்சி பற்றியும் அறிதல் வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய மொழிகளில் அறிவியல் இலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிவது தமிழ் மொழியில் இவற்றை உருவாக்கி வளர்க்க உதவும். ஆங்கிலத்தில் கடந்த 100-150 ஆண்டுகளாகத்தான், உலகத்தவர் உழைப்பால் பெருவளர்ச்சி அடைந்துள்ளது. இன்றும் நாள்தோறும் கடுமையக பலர் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இன்னும் அம்மொழியில் இலக்கிய வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதனை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழில் விக்கி போன்ற கலைக்களஞ்சிய உருப்படிகள் யாவரும் பயன்பெறுமாறு அமைக்க வேண்டும். இது தொடர்பாக மிகச்சிறிதளவாவது தொடர்புடைய மேற்கோள்களைத் தொகுக்க எண்ணியுள்ளேன். இப்போதைக்கு பயனர்:செல்வா/மேற்கோள்கள் என்னும் பக்கத்தில் தொகுக்க இருக்கின்றேன். இப்பக்கத்தில் நீங்களும் மேற்கோள்களைச் சேர்க்கலாம். உங்கள் கையொப்பம் அல்லது பெயரையையும், சேர்த்த நாளையும் இட வேண்டுகிறேன். இவை பக்க வரலாற்றில் இருக்கும் எனினும் இட்டவர் குறிப்பைச் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 16:35, 16 டிசம்பர் 2008 (UTC)


கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு கட்டுரையில் தமிழில் (இன்ப) இலக்கிய வரலாறு எழுதப்பட்ட அளவுக்கு தமிழின் அறிவியல்/உரைநடை படைப்புகள் வரலாறு எழுதப்படவில்லை என்றார். தமிழ்க் கணிதம், மருத்துவத் தமிழ், அறிவியல் தமிழ் சட்டத் தமிழ் என்று நானும் சில குறிப்புகள் சேத்து வருகிறேன்.

முன்னர் ஒருமுறை நீங்கள் தமிழில் தொழில்கலை கலைச்சொற்கள் அழிந்துவருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்னும் எமக்கு ஒரு குறுகிய கால அவகாசம் உண்டு.

மேலே தரப்பட்ட சுட்டிகளில் மரவேலை, நெசவு போன்ற துறைகளின் கலைச்சொற் பட்டியல்கள் உள்ளன. இவை 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதே போன்று வேறு பல பட்டியல்களும் உண்டு. ஆனால் அவை இணையத்தில் இல்லை.

நீங்கள் குறிப்பிட்டது போல நானும் மேற்கோள்களாச் சேப்பேன். நன்றி. --Natkeeran 22:04, 16 டிசம்பர் 2008 (UTC)

சுட்டுகளுக்கும், ஒத்த கருத்துக்கும் நன்றி நற்கீரன். தமிழர்களில் மிகப்பெரும்பாலோர் (90-97%) தொழிற்கலைஞர்கள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்களை ஆண்டு வந்திருக்கின்றனர். அருகி வந்தாலும் இன்றும் உண்டு; தொகுப்பார் இல்லை, அல்லது குறைவு. வியப்பூட்டும் பொருள் செறிவு உடையவை இச்சொற்கள். அணைகளும், கோயில்களும் கோட்டைகளும் ஆக்கல், நூறாயிரக்கணக்கான மருந்துகளும், இசை நுணுக்கங்களும், கருவிகளும், படைக்கலன்கள் ஆக்கல், நகைகள் ஆக்கல், அதற்கான தொழிற்வினைக்கருவிகள், கப்பல்கள் கட்டல், தோல்வினைப்பொருட்கள், பாய், ஆடை நெசவு, மாழை (உலோக)ப் பொருட்கள் உருவாக்குதல் என்று எத்தனையோ கலைகள் இருந்தன. கணிதம், வானியல், நேரம், நாழிகை கணித்தல், பல்வேறு அளவிடு கருவிகள் படைத்தல் இருந்தன. தக்க அறிவில்லாமல் இன்றும் நிற்கும் கோயில்களும் அணைகளும் செய்தல் இயலாத ஒன்று. வடிவவியல், மற்றும் நூற்றுக்கணக்கான கணிதவியல் அறிந்திருக்க வேண்டும். இராசராச சோழன் காலத்தில் உள்ள நில அளவைத் துல்லியம் அக்காலத்தில் வேறு எங்குமே காண இயலாதது என்று வேற்று நாட்டு அறிஞர் ஒருவர் (நிப்பானியரோ வேறு யாரோ ஒருவரோ) எங்கோ எழுதியதை படித்துள்ளேன் (குறிப்பு மீண்டும் கிடைத்தால் இங்கு எங்கேனும் சேர்க்கின்றேன்). கருநாடக நாட்டில் உள்ள சில கட்டிடங்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள் உதவியுடன் செய்தது என்பர். --செல்வா 22:32, 16 டிசம்பர் 2008 (UTC)
நானும் என்னாலான மேற்கோள்களைச் சேர்க்க முயல்கிறேன். நல்ல முயற்சி. -- சுந்தர் \பேச்சு 04:33, 17 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_அறிவியல்&oldid=327435" இலிருந்து மீள்விக்கப்பட்டது