பேச்சு:ஜெகசிற்பியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய இலக்கியச் சிற்பி: ஜெகசிற்பியன்! [தொகு] - ந.வேலுசாமி -


[அண்மையில் இந்திய சாகித்திய அக்காதெமி' இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஜெகசிற்பியன் பற்றிய அறிமுக நூலொன்றினை வெளியிட்டிருந்தது. எழுதியவர் ந.வேலுசாமி. அந்நூலிலிருந்து ஜெகசிற்பியன் பற்றிய சில தகவல்களைத் தருகின்றோம். ஜனரஞ்சக சஞ்சிகைகளில் தொடராக வரும் படைப்புக்களை ஒதுக்கி விடும் போக்கு இன்றைய சிற்றிதழ் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஜனரஞ்சக சஞ்சிகைகளில் தொடர்களாக வரும் படைப்புகள் என்பதால் அவற்றின் தரம் குறைந்து போயிருக்க வேண்டுமென்பதோ அல்லது சிற்றிதழ் சஞ்சிகைகளில் வருவதால் அல்லது தனி நூல்களாக வெளிவருவதால் அவற்றின் தரம் சிறப்பானதாக இருக்க வேண்டுமென்பதோ இல்லை. தொடராக வெளிவந்த காலங்களில் பலத்த தாக்கத்தினை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்திய அகிலனின் 'பாவை விளக்கு', நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', கல்கியின் 'பொன்னியின் செல்வன்', ஜெகசிற்பியனின் 'ஜீவ கீதம்', தி.ஜானகிராமனின் 'மோகமுள்', 'அன்பே ஆரமுதே' உட்படப் பல நாவல்கள், கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு', ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்', 'ரிஷி மூலம்' , ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்கள், மீ.ப.சோமுவின் 'ரவிசந்திரிகா', ..இவ்விதமான நாவல்கள். சிறுகதைகள் ஆகியவற்றினை அவ்வளவு எளிதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒதுக்கி விட முடியாது.]


The writer of the article appears to be ந.வேலுசாமி, and the contributor is V.N.Giritharan. I am assuming he has the copyright permission. I will try confirm that later. --Natkeeran 18:20, 20 ஏப்ரல் 2006 (UTC)

1975இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வாளர் வி. குமாரவேலு என்பார் ஜெகசிற்பியனின் 'சொர்க்கத்தின் நிழல்' , 'ஜீவகீதம்' கிய புதினங்களை எம்.ஏ. பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.

1975இல் டி.பத்மாசனி என்பார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்ட ஆய்வுரைக்கு ஆலவாயழகன், நந்திவர்மன் காதலி ஆகிய புதினங்களை ஆய்வு செய்தார் .

1980இல் எஸ்.சுப்பிரமனியன் என்பார் ஜெகசிற்பியனின் 'சொர்க்கத்தின் நிழல்' புதினத்தை எம்.பில். பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார். ஜெகசிற்பியனின் வரலாற்று நாவல்கள் பற்றி பி.எச்.டி. பட்டத்திற்கு உமா ஜெயசீலன் என்பவர் ஆய்வுச் செய்துள்ளார். மேலும் ஜெகசிற்பியனின் சிறுகதைகள் பற்றி எம்.கபில். பட்டத்திற்கு குமாரி என்பவர் ஆய்வு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவை.

சென்னை இராணிமேரி கல்லூரியின் முன்னாள் முதல்வர், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் திருமதி வெ.கனகசுந்தரம் அவர்கள் 'ஜெகசிற்பியனின் சமூகப் புதினங்கள்' என்ற பொருளில் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து, பட்டம் பெற்றபின் அதே தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மா.மயில்சாமி அவர்கள் 1984இல் 'ஜெகசிற்பியன் சமூக நாவல்களில் கதைக் கருத்துகளும், அவைகளின் வளர்ச்சியும்- ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெகசிற்பியன்&oldid=125442" இலிருந்து மீள்விக்கப்பட்டது