பேச்சு:சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை வான்குண்டுவீச்சில் சு.ப.தமிழ்ச்செல்வன் இறப்பு என மாற்றலாமா?--Kanags 00:04, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

வான்குண்டுவீச்சில் சு. ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்பது கூடிய பொருத்தமாக இருக்குமா...இறப்பு மிதமானதாக இருக்கின்றது. --Natkeeran 00:40, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

வீரச்சாவு என்று தான் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். இறப்பு பொருத்தமாகப்படுகிறது.--Kanags 01:18, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
Assassinated என்பது கூடுதல் பொருத்தமாக இருக்குமென்றே நினைக்கின்றேன். இதற்குக் கொல்லப்பட்டார் என்பது பொருத்தமாக இருக்கலாம் ஏனெனில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீதே தாம் தாக்கியதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. --Umapathy (உமாபதி) 08:52, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
அப்படியெனில் "கொலை" என்றுதான் கொள்ள வேண்டும். கட்டுரைத் தலைப்புக்கள் பொதுவாக பெயர்ச்சொல்லாக இருத்தல் நலம். செய்திக் கட்டுரைகளாக இருந்தாலும் இது போல் முழுநீள வரியாகத் தலைப்பு இருக்க வேண்டியதில்லை. தலைப்பைப் பெயரிடல் மரபிற்கேற்ப வைத்துவிட்டு காட்டும் தலைப்பை "|" துணைகொண்டு வேண்டியவாறு கொளலாம். -- Sundar \பேச்சு 08:57, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
என் விருப்பத்தேர்வுகள் சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை/இறப்பு. வான்குண்டுவீச்சில் என்பது தலைப்பில் தேவையில்லை, கட்டுரையில் முதல் வரியில் மற்றும் செய்திப்பகுதியில் காட்டுதலைப்பாக மட்டும் கொள்ளலாமே. -- Sundar \பேச்சு 09:00, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
மேலே சுந்தரின் கருத்தை ஏற்பதோடு கொலை என தலைப்பை மாற்றும் வண்ணம் பரிந்துரைக்கின்றேன். இறப்பு என்றவுடன் இயற்கையாக ஏற்பட்டது போன்ற ஓர் உணர்வே ஏற்படுகின்றது. --Umapathy (உமாபதி) 10:59, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சுந்தரின் தலைப்பு பொருத்தமானது. என் பரிந்துரையும் சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை என்பதே. --செல்வா 11:48, 3 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பல ஊடகங்கள் இந்நிகழ்வை செய்திகளில் கொலை என்று எழுதியிருந்தாலும் தலைப்புகளில் பலி(தினக்குரல்), மரணம் (பிபிசி தமிழோசை), உயிரிழப்பு (SBS Australia) என்றே எழுதியிருக்கின்றன.--Kanags 01:41, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தற்காப்பதற்கான அவகாசமும், முன்னறிவிப்பும் இன்றி, ஒருவரைக் குறி வைத்து செய்யப்பட்ட தாக்குதல் என்பதால் "கொலை" என்று தலைப்பிருப்பதே பொருந்தும். படுகொலை என்று சொன்னாலும் தவறில்லை. படுகொலை என்ற சொல்லைப் பிரபலமானவர்களின் கொலையைக் குறிப்பிட மட்டும் பயன்படுத்துகிறார்களா என்று நினைக்கிறேன். எனினும் விக்கிபீடியாவின் மித நடைக் கொள்கையைக் கருத்தில் கொண்டு கொலை என்ற சொல்லையே தலைப்பில் பயன்படுத்தலாம். தாக்குதல் உத்தியும், தாக்கியவரின் அதிகாரமும் தகுதியும், பொதுப்பார்வை அல்லது அதிகாரப்பார்வையில் தாக்கப்பட்டவரின் தகுதிக் குறைவும் இறப்பின் தன்மையை மிதப்படுத்தி விடவோ நியாயப்படுத்தி விடவோ முடியாது. களத்தில் போராடி இறப்பதை வீரச்சாவு என்று கொள்ளலாம். இறப்பு, மரணம் ஆகியவை இயற்கைச் சாவுகளுக்கே பொருந்தும். இயற்கைப் பேரழிவுகள், விபத்துகளில் எதிர்ப்பாராமலும் திட்டமிடப்படாமலும் இறப்பவர்களுக்கு பலி என்று சொல்லைக் கையாளலாம். பலி வட மொழிச்சொல்லா என்று தெரியவில்லை. பலி கொடுப்பதைக் காவு கொடுப்பது என்றும் சொல்வர். காவு தமிழ்ச்சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை என்று தலைப்பிடுவது பொருந்தும். --Ravishankar 20:32, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

கருத்துக்களுக்கு நன்றி ரவி. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தவிர, பலி வடமொழி தான். காவு தமிழ்ச்சொல்லென்றே நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 02:45, 5 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]