உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கே. எஸ். ஆனந்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணிக்கம் தொடர் என்றால் என்ன?--ரவி 17:29, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

மாணிக்கம் ஒரு இதழ். சஞ்சிகையா பத்திரிகையா எனத் தெரியவில்லை. --கோபி 18:11, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

மாணிக்கம் இதழில் தொடராக வந்ததை குறிப்பிடத்தேவை இல்லை என்று தான் நினைக்கிறேன். பல தமிழ் நாவல்கள் முதலில் தொடராக வெளிவந்து தான் பின்னர் நூலாக அச்சிடப்படுகின்றன. அப்புறம், சஞ்சிகைக்கும் பத்திரிக்கைக்கும் என்ன வேறுபாடு? இந்த ஐயத்தை யாரும் தீர்த்து வைத்தால் தேவலை :)--ரவி 19:50, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

பல நாவல்கள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்து புகழ் பெற்றன. அவை அனைத்தும் நூலுருப்பெறவில்லை. எனவே, தொடராக வெளிவந்தவை பற்றி குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.

ஈழத்தில் இதழ் என்னும் சொல் சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் குறிக்கின்றன. பத்திரிகை என்பது வெறும் செய்தித்தாள்கள். இவை ஞாயிறுகளில் கலை இலக்கியப் படைப்புகளையும் தாங்கி வருகின்றன. சஞ்சிகைகள் அனைத்தும் கலை இலக்கிய இதழ்கள். செய்திகளைப் பொதுவாகத் தருவதில்லை. எனவே தான் இந்த வேறுபாடு.

மாணிக்கம் 70களில் மிகப்பிரபல்யமான ஒரு மாத சஞ்சிகை. இரகுபதி பாலஸ்ரீதரன் ஆசிரியராக இருந்தவர். கொழும்பிலிருந்து வெளிவந்தது.--Kanags 21:31, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

குறித்த நாவல்கள் நூலுருப் பெறாமையாலேயே தொடராக வந்தமை குறிப்பிடப்பட்டு உள்ளது. --கோபி 23:56, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._எஸ்._ஆனந்தன்&oldid=54199" இலிருந்து மீள்விக்கப்பட்டது