பேச்சு:ஒக்டோப்பஸ் செலவட்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்டோப்பஸ் செலவட்டை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Purse or Money Purse என்பதற்கான தமிழ் சொல் என்ன? --HK Arun 13:55, 22 ஜனவரி 2009 (UTC)

பணப்பை (http://dictionary.sarma.co.in/)--Kanags \பேச்சு 22:34, 22 ஜனவரி 2009 (UTC)

பணப்பை[தொகு]

பணப்பை என்பது சரிதான். ஆனால் பை எனும் தமிழ் சொல் Bag என்பதையும் குறிக்கிறது. Purse தோற்றத்தில் சிறியதாகவும் கையடக்கமாகவும் மடித்து சட்டை அல்லது காற்சட்டைப் பைக்குள் வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றதே!

  • Purse – (பணப்) பை
  • Bag – பை
  • Pocket – (சட்டை) பை

இம்மூன்றுக்கும் “பை” எனும் ஒற்றைத் தமிழ் சொல் பொருத்தமானதா? தவிர பணப்பை என்று வைத்துக்கொண்டாலும்; “Purse” இல் பணம் மட்டுமே வைப்பதில்லை அல்லவா? “Purse” இல் பணம் இல்லாதப் பொழுதும் “purse” பாவிக்கின்றோம் அல்லவா? பொருத்தமான வேறுச் சொற்கள் உள்ளனவா?--HK Arun 02:06, 23 ஜனவரி 2009 (UTC)