உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஏர்டெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊடகங்களும், வணிக நிறுவனங்களும் ஒலிப்புமுறையையோ, இலக்கணத்தையோ, தமிழ் மொழியின் இயல்பையோ அறியாமல் மிகவும் பிழையாக பலவும் செய்கின்றார்கள். வணிக நிறுவனங்கள் பிழையாக மொழி பெயர்த்தும், எழுத்துப்பெயர்த்தும் பெரும் இடர்களுக்குள்ளான கதைகளும் உண்டு (சீனா ஆகிய நாடுகளில்). ஏர்டெல் என்றும் எழுதினால் airdel என்று படிக்க வேண்டும். இதனை AirTel என்பது போல ஒலிக்க வேண்டும் என்றால் ஏர்ட்டெல் என்று ஒரு ட் சேர்த்து எழுத வேண்டும். வென்ஜெர்ஸ் என்று இக்கட்டுரையில் உள்ளது அது Venture என்னும் சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் வெஞ்ச்சர்சு என்று எழுதலாம். அல்லது வென்ச்சர்சு என்று எழுதலாம். --செல்வா 18:41, 8 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

அதிகாரப்பூர்வ தமிழ்ப் பெயராக “ஏர்டெல்” ஆகிவிட்டது. அதை நாம் மாற்றக் கூடாது. (விளம்பரங்களால் பிராண்ட் ஆகி விட்டதே). ventures என்பதை நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன். --சோடாபாட்டில் 18:53, 8 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நீங்கள் செய்த மாற்றத்திற்கு நன்றி சோடாபாட்டில். வணிகப் பெயர், அதனை "மாற்றக்கூட்டாது" என்பதனை அறிவேன். இப்படியான செய்கைகளினால், தமிழ் மொழியில் ஒலிப்பு முறையில் குழப்பம் உண்டாகின்றது. முறைமை காக்கும் பொருட்டும், குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டும், பிறைக்குறிகளுக்குள் தமிழ் எழுத்துக்கூட்டலை aerDel என்று படிக்கவும் என்று கூற வேண்டும் எனத் தோன்றுகின்றது (செய்யச் சொல்லவில்லை). லிமிடெட் என்பதை limiDet என்று படிக்க வேண்டும். மற்ற இந்திய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் வல்லின எழுத்துகளின் ஒலிப்பு சூழல் சார்ந்தது, மிக ஒழுக்கமானதும், நுட்பமானதும் ஆகும். இவ்வகையான செயல்க்ளினால் ஒலிப்பொழுக்கம் மிக்க தமிழ்மொழி குழப்ப ஒலிப்புடைய மொழியாக சிதைக்கப்படுகின்றது. ஒரு வணிக நிறுவனம் என்பதால் coral reef போன்ற நுட்ப உள்சூழல் இணக்கம் உள்ள அமைப்பைக் கெடுக்க உரிமை உண்டா? இவற்றை எண்ணிப் பார்ப்பதற்காக கூறுகின்றேன். "க்ரியா" என்று தமிழ் அகராதிகளில் ஒரு அகராதிக்கே இலக்கணவழுவாகப் பெயர். கேட்டால் அது வணிகப் பெயர் (இன்னும் பிர காரணங்களும்). அதுவாவது இலக்கணம், ஆனால் ஒலிப்பு என்பது மொழியின் ஆணிவேர்போன்ற கூறு. அதனை வணிக நிறுவனங்களின் பெயர்கள் என்னும் பெயரில் சிதைப்பது பெருங்கொடுமையாக எனக்குப் படுகின்றது. "ஏர்டெல்" (தமிழில் இவ்வெழுத்துக் கூட்டலை aerDel என்று படிக்கவும், ஆனால் ஆங்கில எழுத்தில் இருக்கும் பெயர் ஏர்ட்டெல் என்பது போன்ற ஒலிப்பு தரும்) என்று குறிக்கவேண்டும் என்று உந்துதல் பிறக்கின்றது. வணிக நிறுவனத்தின் பெயர் என்பதால் ஒரு மொழியின் அடிப்படைக் கூறு ஒன்றைக் குலைப்பதைப் (இது இலக்கணம் அல்ல) பார்த்து வாளா இருக்க வேண்டுமா? மொழியுரிமைகள் போற்றப்பட வேண்டாவா? இவற்றை இக் கருத்துகளை எண்ணிப்பார்க்கவே இடுகின்றேன். ஏதும் மாற்றம் செய்ய இயலுமா என அறியேன்.--செல்வா 17:40, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
வணிகப்பெயர் "உரிமை"களுக்காக மாற்றக்கூடாது என்பது தமிழ் மொழியின் வேரான ஒலிப்பு முறையைச் சிதைப்பதால் சரியான ஒலிப்பு பாரதி ஏர்ட்டெல் என்று பிறைக்குறிகளுக்குள் இட்டிருக்கின்றேன். இது ஒரு முயற்சிதான் (தக்க காரணங்களுடன் தேவை என நிறுவினால் நீக்கலாம்). இப்படிச் செய்வதில் பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். ஒரு வணிக நிறுவனத்துக்கு உரிமை இருப்பதுபோல மொழிக்கும், அதன் நலம் காக்கும் கடமையும், உரிமையும் உண்டு என்று நினைக்கின்றேன். வாயில்லா கடலடி பவழப்பாறைகளையும், நூறாயிரக்கணக்கான உயிரினங்களையும், வணிக நோக்கத்துக்காக அழித்தால் அவை தம் எதிர்ப்பு நேரடியாக சொல்ல இயலாது இருக்கலாம், ஆனால் தமிழை தங்கள் அறியாமலும், பொறுப்பற்ற செயல்களாலும் அழிக்கும் (அல்லது அழியவிடும்) முயற்சிகளுக்கு மாற்றாக இப்படி பிறைக்குறிகளுக்கு இட்டு சரியான முறையை குறிப்பிடலாம் என்பது என் கருத்து. --செல்வா 18:12, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
இது சரியே. முடிந்தால் ஒரு .ogg ஒலிப்பு கோப்பையும் உள் இணைப்பாக இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 18:16, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில். --செல்வா 18:19, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏர்டெல்&oldid=592059" இலிருந்து மீள்விக்கப்பட்டது