பேச்சு:ஈழப்போருக்கு எதிரான உலகத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அராஜகம் என்பது போன்ற பொருத்தமற்ற சொற்கள், தனியொரு வலைப் பக்கத்தை முழுக் கட்டுரைக்கும் ஆதாரமாகக் காட்டப்பட்டிருப்பதுடன் அதற்கான இணைப்புக் கிடைக்காமை போன்றவை இதன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன.--பாஹிம் (பேச்சு) 07:55, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]

அது தனியொரு வலைப்பக்கமல்ல. அது தமிழ்வின் செய்திச் சேவை. பலவற்றில் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. போதுமான மேற்கோள்கள் உள்ளன. மேலும் இணைக்கலாம். கட்டாயம் பதியப்படவேண்டிய கட்டுரை. நீக்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 09:11, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
உலகத் தமிழரின் அறவழிப்போர் என்கிற தலைப்பு, உலகில் உள்ள வேறு வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் அறவழிப்போராட்டங்களை உள்ளடக்கி இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. (அவ்வாறு நினைத்துத் தான் திறந்தேன்). பொதுவான தலைப்பாக உள்ளது. அதனால், நான்காம் ஈழப்போருக்கு எதிரான உலகத் தமிழர்களின் அறவழி ஆர்பாட்டங்கள் என்றிருக்க பரிந்துரைக்கிறேன். -- மாகிர் (பேச்சு) 12:16, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி மாகிர், அவ்வாறே மாற்றலாம். பாகிமின் ஆலோசனைக்கமைய கட்டுரையும் முழுமையாக விக்கிப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 12:27, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஈழப்போருக்கு எதிரான உலகத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:29, 18 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 15:36, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆதாரமாகத் தரப்பட்டுள்ள வலைப்பக்கங்களில் எதுவும் செயற்படவில்லை.--பாஹிம் (பேச்சு) 15:37, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]

பல செய்தித் தளங்களில் உள்ள கட்டுரைகள் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் காணாமல் போய் விடுகின்றன. இது ஒரு பெருங்குறையே. இதனால் தான் போலும், ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் செய்தி பார்க்கப்பட்ட நாளையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள்.--Kanags \உரையாடுக 21:20, 18 சூலை 2012 (UTC)[பதிலளி]
தலைப்பு மயக்கம் தருவதாக உள்ளது. ஈழப்போராட்டத்திற்கு எதிரான என்பது தமிழ்த் தேசியம் குறித்த சிந்தனைக்கு எதிரான போராட்டங்கள் எனப் பொருள்பட்டு விடும். உள்ளடக்கம் அதுவல்ல. இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் போருக்கு எதிரான அறவழிப் போராட்டங்கள் என்பதுவே சரி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:41, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிவகுமார், தலைப்பு ஈழப்போராட்டத்திற்கு எதிரான அல்ல, ஈழப்போருக்கு எதிரான என்பதே. எனவே தலைப்பு சரியென்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:25, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றிகள் கனக்ஸ். எற்றுக் கொள்கின்றேன் ஆயினும் சிறு தயக்கத்துடனான குழப்பம் எனக்குள்ளது. மற்றவர்களின் கருத்துக்களையும் அறிவோம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:50, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]