உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இ. ஜெயராஜ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பன் கழகம் உருவாகிய ஆண்டைத் தயவுசெய்து சரிபார்க்கவும். இது 1890 ஆ அல்லது 1980 ஆ--உமாபதி 17:22, 2 டிசம்பர் 2007 (UTC)

கோபி, திருத்தங்களுக்கு நன்றி. :) --உமாபதி 14:04, 3 டிசம்பர் 2007 (UTC)

பத்தி எழுத்துக்க்ள் என்றால் ? புரியவில்லை. கொஞ்சம் தெளிவு படுத்தவும் வினோத் 14:35, 3 டிசம்பர் 2007 (UTC)

பத்தி எழுத்தாளர் = columnist கோபி 17:31, 3 டிசம்பர் 2007 (UTC)

Blog-கள் சரியான தானா ? Blog என்பது தனிப்பட்ட மனிதர்களுடையாதாக இருக்கும் பொது, அது அவர்களுடைய தனிக்கருத்தே ஆகும். பொதுவாகவே, Blog என்பது ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு அவர்களுடைய சொந்த கருத்துக்களுக்கு ஏற்றவாறு எழுதப்படுவது. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களை பிரதிபலிக்கும் தனிமனித Blog மேற்கோள்களுக்கு பொதுவாக தகுதியற்றன என்பது எனது கருத்து வினோத் 17:43, 3 டிசம்பர் 2007 (UTC)

வினோத், நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் தமிழில் மேற்கோள் காட்டுமளவுக்குப் போதிய ஆதாரங்கள் இணையத்தில் இல்லை. தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும், ஒருங்குறியில் அமைந்த தமிழ்த் தளங்கள் எத்தனைதான் உள்ளன? ஆங்கிலம்போல எல்லாவற்றுக்கும் ஆதாரம் தருவது சாத்தியமே இல்லை. ஆனால் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றுக்கு ஆதாரந் தருவது அவசியமாகிறபோது வலைப்பதிவுகளையும் இணைக்க வேண்டியேற்படுகிறது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் இங்கே பரவலாக உள்ளவையே. கோபி 17:56, 3 டிசம்பர் 2007 (UTC)
இவரது உரையை பல வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சித்திவிநாயகர் கோயில் ஒருமுறை திருவிழாவில் கேட்டேன். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. இதில் இந்துவத்தைப் பரப்புகின்றார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. --உமாபதி 18:04, 3 டிசம்பர் 2007 (UTC)

அக்கருத்துடன் எனக்குக் கூட உடன்பாடு இருக்க வேண்டுமென்றில்லை. அவ்வாறு (அதற்கு மேலும்) ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதனைப் பிரதிபலிக்கும் ஒரு வலைப்பதிவின் இணைப்புடன் அத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி. கோபி 18:07, 3 டிசம்பர் 2007 (UTC)

இந்த பிரச்சினை வினோதமாக உள்ளது. இலங்கைத்தமிழர்கள் பெரும்பாலும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் தானே, இதில் இந்துத்துவத்தை பரப்பும் பிரச்சினை எங்கிருந்து வந்தது? . இந்தியாவில் வேண்டுமானால் இது போன்றவை அவ்வபோது(அரசியற்காரணங்களால் மட்டுமே) எழும். இலங்கையிலும் இந்துத்துவ பிரச்சினை வந்துவிட்டதா என்ன ? வினோத் 18:09, 3 டிசம்பர் 2007 (UTC)

இலங்கைத் அத்மிழர் வழிபாடு பொதுவாக இந்துசமயம் எனப்பட்டாலும் சைவமே இங்கே முதன்மைச் சமயமாகும். கோயிற் பெயர்களின் சமசுகிருத மயமாக்கம், பாரம்பரிய பூசை முறைகளை ஒழித்துப் பிராமணரை முன்னிறுத்துகின்றமை, இராமர். அனுமார் ஆலயங்கள் அமைக்கப்படுகின்றமை போன்ற பல வேலைத்திட்டங்கள் இலங்கையில் பெருமளவு செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. கோபி 18:12, 3 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._ஜெயராஜ்&oldid=191669" இலிருந்து மீள்விக்கப்பட்டது