உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை இலங்கை சனாதிபதி கட்டுரையிலேயே இணைத்து விடலாமே. அக்கட்டுரை சிறியதாகத் தான் உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 09:00, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதில் இரண்டு விடயங்களை இணைக்கவுள்ளேன். எழுதி முடித்தபின் தேவைப்படின் மாற்றி விடுங்கள்--P.M.Puniyameen 10:25, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில் இக்கட்டுரையில் சனாதிபதி பதவி வெற்றிடமானால் மீள் நிரப்பல் முறைக்குறித்தும் எழுதவுள்ளேன். கட்டுரை சற்று பெரிதாக வரும். இதை தனிக்கட்டுரையாக அமைப்பதா? அல்லது ஏற்கெனவேயுள்ள கட்டுரையுடன் இணைப்பதா? என்ற முடிவை நீங்கள் எடுங்கள். இக்கட்டுரையில் சில உதாரணங்களையும் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதினாலும், சனாதிபதியின் பதவி வெற்றிடமாதல், குற்றப்பிரேரணை, வெற்றிடத்தை நிரப்பல் மூன்று விடயங்களும் ஒன்றாக வரவேண்டியுள்ளதினாலும் இதனை தனித்தலைப்பாக எடுத்தேன். இதை தனிக்கட்டுரையாக எடுப்பதாக இருந்தால் என்னால் இடப்பட்ட தலைப்பு பொருத்தமில்லை எனத்தோன்றுகிறது. பொருத்தமான முறையில் மாற்றியமைப்பது சிறப்பு. --P.M.Puniyameen 11:27, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை பெரிதாகி ஆழமாகப் போகும் பட்சத்தில் தனியாகவே இருக்கட்டும் ஐயா. சனாதிபதி கட்டுரையில் ஒரு சிறு சுருக்கத்தை மட்டும் ஒரு பத்தியாக எழுதி, அங்கிருந்து இங்கு இணைப்பு கொடுத்து விடுகிறேன். நீங்கள் முழுதும் முடித்த பின்னர் தலைப்பை மாற்றம் பற்றி பற்றி ஆராய்வோம்--சோடாபாட்டில்உரையாடுக 11:44, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  • இலங்கை சனாதிபதியின் பதவி வறிதாதல் குற்றம் பிரேரனை கொண்டுவரல் பதவிக்காலியாகுமிடத்து மீள்நிரப்பல் மேற்கொள்ளல் போன்றவை குறித்து சட்ட ஏற்பாடுகளை இங்கு குறித்துள்ளேன். இந்த மூன்று விடயங்களுக்கும் பொதுவான ஒரு தலைப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.

மேலும், ஒரு அன்பான வேண்டுகோள் விக்கியின் பயனரான நானும் உங்களில் ஒருவனே. எனவே, ஐயா என்று விழிப்பதைத் தவிர்த்துக் கொண்டு எனது பெயரைக் கொண்டே விழிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். விக்கியில் எனது பங்களிப்புள்ள வரை நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்போம் .--P.M.Puniyameen 07:53, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

எல்லாம் வயதிலும் அனுபவத்திலும் மூத்தோர்களின் மீது ஒரு மரியாதை தான் :-) இனி உங்களை பெயர் சொல்லியெ அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:00, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
”இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்” எனபது பொருந்தி வருமா?--சோடாபாட்டில்உரையாடுக 08:00, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில். பொருந்தி வரும் - தலைப்பு பெரிதாகி விடாதா? --P.M.Puniyameen 10:11, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
சற்றே பெரிதானாலும் ஒரு மூச்சில் சொல்லி முடிக்கக் கூடியதாகவும் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது :-). எனவே பரவாயில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 10:16, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில்.--P.M.Puniyameen 11:46, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]