உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இப்தார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்தார் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அண்மையில் பெங்களூரில் சில பகுதிகளில் இஃவுத்தாருக்காகத் தெருவோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்குச் சென்று நோன்பு நோற்பவர்களுடன் இணைந்து அவர்கள் உண்ணும் உணவுகளைப் புசித்து மகிழ்ந்தோம். அதன் பயனாக வந்த படமும் கட்டுரையும் இங்கே. இக்கட்டுரையில் நோன்பு ஒழுங்குகள் தொடர்பாக எனக்குத் தெரியாததால் அத்தகவல்களைச் சேர்க்கவில்லை. அறிந்தவர்கள் சேர்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:37, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

விரித்து எழுதியதற்கு நன்றி, மயூரநாதன். பகுப்பைச் சேர்த்ததற்கு நன்றி, இபயதுல்லா. -- சுந்தர் \பேச்சு 02:58, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், இதை இப்தார் என மாற்றலாமா? தமிழில் இது இவ்வாறே அழைக்கப்படுகின்றது.--அராபத்* عرفات 03:58, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
அராபத், மாற்றுங்கள், நீங்கள் சொல்வது சரியாக உள்ளது. --செல்வா 04:21, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாற்றுங்கள் அராபத். எளிமையாகவும் உள்ளது. அதோடு அலீம் என்பதையும் கலீம் என்று மாற்றி விடலாமா? சில தமிழரும் தெலுகரும் ஒலிப்பதை உற்று நோக்கினால் கலீம் நெருங்கி வருவது போலத் தோன்றுகிறது. சரியா? -- சுந்தர் \பேச்சு 04:27, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆம் சுந்தர். ஹலீம் என்பதை நாம் தமிழில் கலீம் என்றே அழைக்கலாம். பிறகு நோன்பு கஞ்சி என்பது இறைச்சியாலும் காய்கறிகளாலும் செய்யப்படுவதில்லை. அது கிராம்பு பட்டை போன்ற வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட சாதாரண அரிசிக்கஞ்சி மட்டுமே. சில நேரங்களில் அதில் இறைச்சியும் சேர்க்கப்படும். கட்டுரையில் இதையும் மாற்றியுள்ளேன்.--அராபத்* عرفات 12:18, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி, அராபத்து. நோன்பு கஞ்சியில் இறைச்சி சேர்ப்பார்கள் என்ற தகவலை ஆங்கில விக்கியில் இருந்தே பெற்றேன். எனக்கு அப்போதே சிறிது ஐயப்பாடு இருந்தது. -- சுந்தர் \பேச்சு 12:52, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இப்தார்&oldid=1688710" இலிருந்து மீள்விக்கப்பட்டது