பேச்சு:இந்திய இரயில்வே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இரயில்வே என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய இரயில்வே எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
இந்திய இரயில்வே எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

முதற் பக்கக் கட்டுரை[தொகு]

எதிர்வரும் அக்டோபர் 16-ம் தேதி ஆங்கில விக்கியில் இக்கட்டுரை முதல் பக்கத்தில் வர இருக்கிறது. -- Sundar \பேச்சு 14:18, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

Division - தமிழ்ச் சொல் ? Yard, Good-shed - தமிழ்ச் சொல் ?

division என்ற சொல்லுக்கான தமிழ் சொல் contextக்கு ஏற்றபடி மாறும். பிரிவு, துறை, சரகம், கோட்டம் ஆகியவற்றில் ஏதேனும் சொல் பொருந்துகிறதா பாருங்கள். yard என்ற நீள அளவுக்கு கெஜம் என்ற சொல் பொருந்தும். good-shed க்கு (சரக்குக்) கிடங்கு சரியான சொல்லாக இருக்குமா?--ரவி (பேச்சு) 17:10, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

level crossing - ? chairman - ?

--ரவி (பேச்சு) 20:33, 6 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:57, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:57, 14 மே 2007 (UTC)[பதிலளி]

தலைப்பு பரிந்துரை[தொகு]

train - தொடருந்து
rail - இருப்பு(க்கம்பி); தண்டவாளம்
rails - இருப்புகள்; தண்டவாளங்கள்
railway - இருப்புப்பாதை
railway station - இருப்புப்பாதை நிலையம்
railway junction - இருப்புப்பாதை சந்திப்பு
indian railways - இந்தியன் இருப்புப்பாதைகள்
southern railways - தென்னக (தெற்கு) இருப்புப்பாதைகள்; தென்னிந்திய இருப்புப்பாதைகள்
northern railways - வடக்கத்திய இருப்புப்பாதைகள்; வடக்கிந்திய இருப்புப்பாதைகள்

இக்கட்டுரைக்கு இந்தியன் இருப்புப்பாதைகள் என்று தலைப்பிடலாம். --இராச்குமார் (பேச்சு) 09:41, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்தியன் இருப்புப் பாதைகள் தலைப்பு சரியாகத் தோன்றுகிறது. சற்று மாற்றம் வேண்டுமெனில் இந்திய இருப்புப் பாதைகள் என்று தலைப்பிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:19, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
இந்திய இருப்புப்பாதைகள் என்பது இங்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது. நிறுவனம் என்ற வகையில் இந்திய ரெயில்வே என்றே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:28, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

இலங்கையில் Sri Lanka Railways இலங்கை புகையிரத சேவைகள் (ஆதாரம்: அரசாங்கத்தின் வலைக் கடப்பிடம்) என அழைக்கப்படுகிறது. ஆகவே, இந்திய இரயில்வே என்பதை இந்தியத் தொடருந்துச் சேவைகள் எனக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:35, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

Indian Bank ஐ இந்தியன் வங்கி என எழுதுகிறோம் அல்லவா? அதுபோல் இந்தியன் இருப்புப்பாதைகள் என குறிப்பிடலாம். --இராச்குமார் (பேச்சு) 10:40, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
இராச்குமார், நீங்கள் மேலே தந்துள்ள தமிழ்ச் சொற்களை எங்கிருந்து எடுத்தீர்கள்? railway இருப்புப்பாதை என்பது நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கிறது. அதன் பொருளைத் தரவில்லை.--Kanags \உரையாடுக 10:56, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
அகரமுதலி.கொம் இல் rail carriage என்பதற்கு புகை வண்டிச் சரக்கு என்று தந்திருக்கிறார்களே. உங்கள் கருத்துப்படி இருப்புப்பாதை வண்டி என்றல்லவா வர வேண்டும்.--Kanags \உரையாடுக 11:56, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
இருப்புச் சரக்கு என்று கூட சொல்லலாமே!. Indian Railways - இந்தியன் இருப்புப்பாதை நிறுவனம். இல்லையென்றால் இருப்புப்பாதையகம் என்றும் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 12:13, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

Railway என்பதற்கு இரண்டு பொருள் உண்டு:

1.A track, consisting of parallel rails, over which wheeled vehicles may travel.
2.A transport system using these rails used to move passengers or goods.

இக்கட்டுரைக்கு இரண்டாவது பொருளே பொருந்துகிறது. அதன்படி இந்திய இரயில்வே அல்லது இந்திய தொடருந்து சேவை என்பதே சரியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 11:08, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

பொதுவழக்கில் இந்திய ரயில்வே, தென்னக ரயில்வே என்றே நிறுவனப் பெயர்கள் எழுதப்படுகின்றன. அதே வேளை, இருப்புப் பாதை, இருப்புப் பாதை காவல் போன்ற சொற்களும் தமிழக ஊடகங்களிலும் அலுவல் முறையிலும் பயன்பாட்டில் உள்ளன. எனவே, இருப்புப் பாதை என்பது அறியப்பட்ட கலைச்சொல்லே. highway என்பதை ஒத்த சொல் தான் railway என்பதால் இதற்குத் தகுந்த சொல்லை சீராகப் பயன்படுத்துவது நலம். A track, consisting of parallel rails, over which wheeled vehicles may travel என்ற பயன்பாட்டில் இருந்து தான் A transport system using these rails used to move passengers or goods என்பதே உருவானது என்பதால் ஒரே தகுந்த சொல்லை இரு சூழல்களிலும் பயன்படுத்தலாம். நிறுவனப் பெயர்களை விட்டு விட்டாலும், railway transport போன்ற கருத்தாக்கங்களை எழுதும் போது தகுந்த சொல் தேவைப்படும். --இரவி (பேச்சு) 11:33, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவி, இந்திய ரயில்வே என்பதற்கு இந்தியன் இருப்புப்பாதைகள் என்றும் தமிழகத்தில் (ஊடகங்களிலோ அல்லது வழக்கிலோ சிலசமயங்களில்) குறிப்பிடுவார்கள் என்கிறீர்களா?--Kanags \உரையாடுக 11:41, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
கனகு அவர்கட்கு, அகரமுதலி.காம் இத்தளத்தைப் பார்க்கவும். நன்றி --இராச்குமார் (பேச்சு) 11:48, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
இராச்குமார் இன்னொரு தலைப்பின்கீழ் தந்துள்ள ஒரு பரிந்துரையான... இந்திய இருப்புப்பாதை நிறுவனம் என்பது ஓரளவு அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும், அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிறீதரன், இந்திய இரயில்வே, தென்னக (அல்லது தெற்கு) இரயில்வே என்று தான் அலுவல் முறையிலும் ஊடகங்களிலும் குறிப்பிடுவது உண்டு. எனவே, இந்நிறுவனங்களின் பெயரை அப்படியே விக்கிப்பீடியாவில் குறிப்பிடுவதில் தவறில்லை. அதே வேளை, தமிழ்நாட்டுத் தொடர்வண்டி நிலையங்களிலும் ஊடகங்களிலும் இருப்புப்பாதை, இருப்புப் பாதை காவல் போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே, பொதுவாக இத்துறை குறித்து வரும் இடங்களில் இருப்புப் பாதை என்ற சொல்லின் அடிப்படையிலான சொற்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, http://en.wikipedia.org/wiki/Railway . அதே போல, http://en.wikipedia.org/wiki/Deutsche_Bahn , http://en.wikipedia.org/wiki/British_Railways போன்று தங்கள் பெயரை அலுவல் முறையில் தமிழில் எழுதிக் காட்ட வாய்ப்பே இல்லாத வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரைத் தமிழில் எழுதும் போது தகுந்த தமிழ்ச் சொல் தேவை. Highway, Freeway, Motorway, Airways போன்ற தொடர்புடைய பல சொற்களுக்கும் சீரான கலைச்சொற்களை ஆக்க வேண்டி உள்ளது. கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்: இந்திய இரயில்வே தொடருந்துகளை இயக்குவதோடு மட்டுமன்றி அதற்கான இருப்புப் பாதைகளை அமைக்கும் வேலையையும் செய்கிறது. எனவே, இந்திய தொடருந்து சேவை நிறுவனம் போன்ற பெயர் பொருத்தமாக இல்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலைப் போக்குவரத்துக் கழகங்கள், விமான சேவை நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை தனித்தனியாக செயல்பட்டு வருவதால், இரயில்வேயின் இந்தச் சிறப்பு நிலையை ஓரளவாவது தனித்துக் காட்டும் வகையில் பெயர் இருந்தால் நன்று. எனவே, பாதையை முதலாக வைத்து இயங்கும் சேவையில் அதன் மீது ஓடும் வண்டியை முன்னிலைப்படுத்திப் பெயர் வைக்கலாமா எனத் தெரியவில்லை. --இரவி (பேச்சு) 20:43, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]


நண்பர்களே "இந்திய ரயில்வே" என்பது பேச்சு வாக்கு பெயர், இதன் ஆங்கில ஆட்சிமுறை பெயர் "Indian Railway Board" (மேலும் Railway Board (India) என்ற ஆங்கில கட்டுரையை பார்க்க). அப்படியே இப்பெயரை தமிழாக்கம் செய்தால் "இந்திய இருப்புப்பாதை வாரியம்" ("இந்திய ரயில்வே வாரியம்"). எனவே என்னுடைய எண்ணம்: 'இந்திய இருப்புப்பாதை வாரியம்' என்ற பெயரை வைக்கலாம், ("தமிழ்நாடு மின்சார வாரியம்" என்பது போன்று).

நன்றி Muniyankaruppan (பேச்சு) 07:55, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

railway - railways[தொகு]

railway - இருப்புப்பாதை
railways (organization) - இருப்புப்பாதை நிறுவனம், இருப்புப்பாதையகம்
railways - இருப்புப்பாதைகள்

இங்கு மேலே குறிப்பிட்டப்படி கையாளலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து. --இராச்குமார் (பேச்சு) 12:21, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையின் முதல் பத்தியை மேலுள்ள எனது பரிந்துரையினை பயன்படுத்தி எழுதிகிறேன். பிறகு தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

இந்தியன் இருப்புப்பாதை நிறுவனம் (Indian Railways) இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்தியன் இருப்புப்பாதை நிறுவனத்தில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்குகிறது.

துணைத்தலைப்புகள்:
1 வரலாறு
2 இந்தியன் இருப்புப்பாதை நிறுவனத்தின் மண்டலங்கள்
3 பயணியர் சேவை
4 சரக்குப்போக்குவரத்து
5 புறநகர் இருப்புப்பாதை வண்டிச் சேவை
6 குறிப்பிடத்தக்க தொடர்வண்டிகளும் சாதனைகளும்
7 அதிவிரைவு இருப்புப்பாதை வண்டிகளின் பட்டியல்
8 நிர்வாக அமைப்பு முறை
9 இருப்புப்பாதை நிறுவன வரவு செலவு மற்றும் நிதி
10 இந்தியன் இருப்புப்பாதை நிறுவனத்தின் பிரச்சினைகள்
10.1 விபத்துகள்
10.2 கூட்ட நெரிசல்
10.3 சாலை-இருப்புப்பாதை சந்திப்புகள்
10.4 சுகாதாரம்
11 மேற்கோள்கள்
12 ஆதாரங்கள்
13 வெளி இணைப்புகள்

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய சொற்களைத் தருகிறேன்.

railway - இருப்புப்பாதை
rail - இருப்புப்பாதை (வண்டி)
railways (organization) - இருப்புபாதை நிறுவனம் (நிறுமம்)
railways - இருப்புப்பாதைகள்
train - தொடருந்து; தொடர் வண்டி
--இராச்குமார் (பேச்சு) 16:05, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு.--Kanags \உரையாடுக 22:30, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
Railway என்பதற்கு இருப்புப்பாதை என்பது நன்கு அறிந்த ஒரு சொல்தானே, ஏன் எதிர்ப்பு என்று புரியவில்லை. இரயில்வே என்று இருப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. தொடர்வண்டி, தொடருந்து என்பன நல்ல சொற்களே. இரயில் என்றால் தொடர்வண்டி/தொடருந்து என்று புரிந்துகொண்டாலும், தொடர்வண்டி, தொடருந்து என்னும் சொல்லில் இருக்கும் தெளிவு இரயில் என்பதில் இல்லை (தமிழர்களின் கண்ணோக்கில்). railways (organization) என்பதை இரயில்வே நிறுவனம் என்றே அழைக்கலாம். (இந்திய, தென்னக) இருப்புப்பாதை நிறுவனம் என்றாலும் தவறில்லை. முதல் பத்தியை இராச்குமார் சிறப்பாக எழுதியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன். தொடர்வண்டி/இருப்புப்பாதை நிறுவனம் என்பதற்குச் சேவை என்னும் சொல் தமிழகத்தில் செல்லுமா என அறியேன் (வழக்கம் இல்லாதது என்பது என் கருத்து). சுகாதாரம் என்பதற்குத் தூய்நலம் எனலாம். தூ என்றாலே தூய்மை. கழக அகராதி இருந்தால் பாருங்கள். மிகச்சிறந்த ஓரெழுத்து ஒருமொழி. தூ, தூய்மை, தூப்பு (=தூய்மை, தூய நெஞ்சு) போன்ற பல சொற்கள் உள்ளன. தூநலம், தூய்நலம் எனபன கடினமான சொற்கள் அல்ல. விபத்துகள் என்பதற்கு தீநேர்ச்சிகள் என்றும் கூறலாம். நிர்வாகம் என்பதை நிருவாகம் என்று எழுதலாம். --செல்வா (பேச்சு) 23:03, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
கூகுள் சுட்டுகள் வலுவான அல்லது ஏற்புடைய சான்றாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் "இருப்புப்பாதை" என்பதற்கு 14,200 பக்கங்களைச் சுட்டுகின்றன. சீன வானொலி நிலையம் சீனாவின் உயர்வேக இருப்புப்பாதை என தலைப்பிட்டு கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளது. இருப்புப்பாதை என்பது நன்கு அறிந்த சொல் (தமிழகத்தில்).--செல்வா (பேச்சு) 23:09, 1 சூலை 2012 (UTC) கோல்நெட் என்னும் சேகரிப்பு உதவி நிறுவனம் (தபால்தலைகள், நாணயங்கள் முதலியன), இருப்புப்பாதை என்னும் தனி வகைப்பாடே வைத்துள்ளது. --செல்வா (பேச்சு) 23:17, 1 சூலை 2012 (UTC). தினமணி நாளிதழில் இருப்புப்பாதை என்னும் சொற்பயன்பாடு.--செல்வா (பேச்சு) 23:19, 1 சூலை 2012 (UTC). சுற்றுலா அறிவிப்புகளிலும் இருப்புப்பாதை என்னும் சொற்பயன்பாடு உண்டு. இவை தவிர, நக்கீரன், விகடன் போன்ற பல இதழ்களும் பயன்படுத்தியுள்ளன. எனவே ஐயம் திரிபற இருப்புப்பாதை என்பதைப் பயன்படுத்தலாம். இந்திய இருப்புப்பாதை நிறுவனம் என்று இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. இருப்புப்பாதை என்பது இரயில்வே என்பதற்கு நன்கு அறிமுகம் ஆகி, நன்கு பயன்பாட்டில் உள்ள சொல். பல நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள சொல். --செல்வா (பேச்சு) 23:27, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
சரி செல்வா, நீங்களே சொல்லி விட்டீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் Indian Bank ஐ இந்தியன் வங்கி என எழுதுவதால் இங்கும் இந்தியன் இருப்புப்பாதை நிறுவனம் என எழுத வேண்டுமா என்ன? ஆங்கில விக்கியில் உள்ள en:Glossary_of_rail_transport_terms#R என்ற பக்கத்தையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 23:34, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிறீதரன், நான் கூறவந்தது இருப்புப்பாதை என்னும் சொல்லின் பயன்பாடு பற்றியது மட்டுமே. இந்திய இரயில்வே என்று எழுதினால் எனக்கு மறுப்பு இல்லை. இந்திய இருப்புப்பாதை நிறுவனம் என்று இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை என்று நான் மேலே கூறியுள்ளேன். பொதுவாக ஒரு தமிழர் இரயில்வே என்றால் என்ன என்று தெரிந்து, புரிந்துகொண்டாலும் உடனே உள்ளறிவால் இன்னதால் இன்னது என்று விளங்கிக்கொள்ள இயலாது. இருப்புப்பாதை என்றால் பாதை என்னும் சொல்லும், இரும்பு, இருப்பு என்னும் சொல்லும் அவருக்கு அறிவுத்தூண்டல் தரும். நீங்கள் மேலே சுட்டிய ஆங்கில விக்கிக் கலைச்சொல் யாவுக்கும் சரியான பொருள் சுட்டும் தமிழ்ச்சொற்கள் ஆக்கலாம். இரயில் கார் என்பதை இன்றும் தமிழர்கள் இரயில் பெட்டி என்கின்றனர். தொடர்வண்டிப் "பெட்டி" என்றாலும் புரிந்துகொள்வர். பலரும் கூடித் தேர்ந்தெடுக்கும் தலைப்பை இடலாம். --செல்வா (பேச்சு) 01:24, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]
தலைப்பை மாற்ற வேண்டாம் என்றால் சரி. ஆனால் குறைந்தது "இரயில் பாதைகள்" என்றிருப்பதை "இருப்புப்பாதைகள்" என்றோ, "இரயில்கள்" என்றிருப்பதை "இருப்பாதை வண்டிகள்" (ரயில் வண்டி என்று சிலர் கூறி கேட்டிருக்கேன்) என்றோ, "இரயில்வே ஜங்சன்" என்பதை "இருப்புப்பாதை சந்திப்பு" என்றோ, நிறுவனமாக இல்லாத பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தலாமா? அதாவது இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை திருத்தம் செய்யலாமா? மற்றொன்று "Indian railways" என்பதை "இந்தியன் இரயில்வேஸ்" என்று தானே எழுதவேண்டும். இந்திய இரயில்வே என்பது சரிதானா? --இராச்குமார் (பேச்சு) 10:09, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]
கட்டுரைக்குள் rail என்ற பொருள் வரும் இடங்களில் இருப்புப் பாதை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இங்கு Indian என்பது ஒரு இந்தியனைக் குறிக்கவில்லை. இந்திய நாட்டைச் சேர்ந்த என்பதையே குறிக்கிறது. எனவே இந்திய இரயில்வே என்றே சொல்லலாம். ஊடகங்களிலும் அலுவல் முறையிலும் அவ்வாறே எழுதப்படுகிறது. --இரவி (பேச்சு) 07:42, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம்[தொகு]

இந்திய தொடர்வண்டிப் போக்குவரத்து என்ற தலைப்புக்கு நகர்த்தப் பரிந்துரைக்கிறேன். Railways என்பதற்கான பிரதான கட்டுரை தொடர்வண்டிப் போக்குவரத்து என்றே இருக்கிறது. இரயில்வே என்றல்ல என்பதைக் கவனிக்க. ஒரு கட்டுரை தொடர்வண்டிப் போக்குவரத்து என்றும் இன்னொரு கட்டுரை இரயில்வே என்றிருப்பதும் சிறப்பாகத் தெரியவில்லை. --AntonTalk 04:57, 11 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_இரயில்வே&oldid=3783255" இலிருந்து மீள்விக்கப்பட்டது