உள்ளடக்கத்துக்குச் செல்

பி. சத்ய நாராயண் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சத்ய நாராயண் ரெட்டி
17வது ஒடிசா ஆளுநர்
பதவியில்
1 சூன் 1993 – 17 சூன் 1995
முதலமைச்சர்கள்பிஜு பட்நாயக்
ஜானகி பல்லப் பட்நாயக்
முன்னையவர்சையித் நூருல் அசன்
பின்னவர்கோபால ராமானுஜம்
மேற்கு வங்காள ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
13 சூலை 1993 – 14 ஆகத்து 1993
முதலமைச்சர்ஜோதி பாசு
முன்னையவர்சையித் நூருல் அசன்
பின்னவர்கே. வி. ரகுநாத ரெட்டி
12வது உத்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
12 பெப்பிரவரி 1990 – 25 மே 1993
முதலமைச்சர்முலாயம் சிங் யாதவ்
கல்யாண் சிங்
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
முன்னையவர்முகமது உசுமான் ஆரிப்
பின்னவர்மோதிலால் வோரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-08-21)21 ஆகத்து 1927
மகபூப்நகர், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 அக்டோபர் 2012(2012-10-06) (அகவை 85)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
தொழில்அரசியல்வாதி

பி. சத்ய நாராயண் ரெட்டி (B. Satya Narayan Reddy; பிறப்பு: 1927 ஆகத்து 21 - இறப்பு: 2012 அக்டோபர் 6) இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும், சோசலிச அரசியல்வாதியும் மற்றும் உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார். [1] [2] [3]

ரெட்டி 2012 அக்டோபர் 6, அன்று ஐதராபாத்த்தில் தனது 85ஆவது வயதில் காலமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரெட்டி தெலங்காணாவின் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அன்னாரம் கிராமமான சாத்நகரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். [4]

சுதந்திர போராட்ட வீரர்[தொகு]

14 வயதான ரெட்டி, 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்களின் ஊர்வலத்தை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் 1947 இல் ஐதராபாத் மக்கள் இயக்கத்தில் பங்கேற்றார். அங்கு இவர் ஐதராபாத் நிசாமுக்கு எதிராக ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை ஏற்பாடு செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் இவர் தனது சிறைத் தோழர்களிடையே வாரந்தோறும் வெளியான பயாம்-இ-நாவ் என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோரால் ஈர்க்கப்பட்ட ரெட்டி சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். வினோபா பாவேவின் நிலக்கொடை இயக்கத்தில் பங்கேற்றார். காங்கிரசின் தொடர்பைத் தவிர்த்து, இவர் சோசலிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி மற்றும் லோக்தளுடன் பலவிதமாக தொடர்பு கொண்டிருந்தார். ஜனதா கட்சியின் வேட்பாளராக 1978 ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][4]

ஆளுநர் பதவிக்காலம்[தொகு]

ரெட்டி 1990 பிப்ரவரி 12 முதல் 1993 மே 25 வரை உத்திரப் பிரதேச ஆளுநராகவும், 1993 சூன் முதல் 1995 சூன் 17 வரை ஒடிசாவின் ஆளுநராகவும் [6] பணியாற்றினார்.[7] இவர் 1993 சூலை 13 முதல் 1993 ஆகத்து 14 வரை மேற்கு வங்காள ஆளுநராக கூடுதல் பொறுப்பையும் வகித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இவர் உத்தரபிரதேச ஆளுநராக இருந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "All India Freedom Fighters' Organisation". Archived from the original on 26 March 2012.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2016-08-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "SHRI. B. SATYA NARAYAN REDDY". Rajbhavan Lucknow. Archived from the original on 21 May 2007. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.
  4. 4.0 4.1 4.2 "SHRI. B. SATYA NARAYAN REDDY". Archived from the original on 21 May 2007.
  5. "Former U.P. Governor Satyanarayana Reddy passes away". http://www.thehindu.com/news/national/former-up-governor-satyanarayana-reddy-passes-away/article3972008.ece?homepage=true. 
  6. "Brief History of Odisha Legislative Assembly Since 1937". ws.ori.nic.in. 2011. Archived from the original on 9 January 2007. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012. NAME OF THE GOVERNORS OF Odisha
  7. "Brief History of Odisha Legislative Assembly Since 1937". ws.ori.nic.in. 2011. Archived from the original on 9 January 2007. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012. NAME OF THE GOVERNORS OF Odisha
அரசியல் பதவிகள்
முன்னர் உத்திரப் பிரதேச ஆளுநர்
12 பெப்பிரவரி 1990 – 25 மே 1993
பின்னர்
முன்னர் ஒடிசா ஆளுநர்
1 சூன் 1993 – 17 சூன் 1995
பின்னர்
முன்னர் மேற்கு வங்காள ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)

13 சூலை 1993 – 14 ஆகத்து 1993
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சத்ய_நாராயண்_ரெட்டி&oldid=3695226" இலிருந்து மீள்விக்கப்பட்டது