பி. இராசகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. இராசகோபால் (P. Rajagopal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரைச் சார்ந்த இவர், ஆம்பூர் கன்கார்டியா பள்ளியிலும் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் பள்ளி மற்றும் உயர்கல்வியினைக் கற்றுள்ளார். விளையாட்டில் ஆர்வமுடைய இராசகோபால் படிக்கும்போது பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இராசகோபால் 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Third Madras Legislative Assembly. Who's is Who 1962. Chennai: Legislative Assembly Department. 01.04.1962. p. 252. {{cite book}}: Check date values in: |date= (help); More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
  2. 1962 Madras State Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இராசகோபால்&oldid=3382325" இலிருந்து மீள்விக்கப்பட்டது