பிரீயோபீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃப்ரீமேண்டிலில் உள்ள ரவுண்ட் ஹவுஸில் ஃப்ரீயோபீடியாவின் விரைவு துலங்கல் குறியீட்டினை பயன்படுத்தும் காணொளி

ஃப்ரீயோபீடியா ( Freopedia) விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளுடன் மக்களை இணைக்க மேற்கு ஆஸ்திரேலியாவின் ஃப்ரீமண்டில் சுற்றியுள்ள தளங்களில் விரைவு துலங்கல் பீடியா குறியீடுகளை (QRpedia Codes) நிறுவும் திட்டமாக தொடங்கியது. [1] இது விக்கிபீடியாவில் ஃப்ரீமண்டிலின் விரிவான தகவல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கிடவுன் திட்டமாக உருவெடுத்துள்ளது.

இந்த யோசனை மோன்மவுத்தின் மோன்மவுத்பீடியாவிலிருந்து வந்தது. [2][3]

ஃப்ரீமாண்டில் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்ட முதல் நகரமாகும், இதனால் அது தன் வரலாற்று தளங்களின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தை வழங்குகிறது. [1][4][5] ஃப்ரீமண்டிலுக்கு வருபவர்கள் அந்நகரத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தின் உதவியுடன் நடைப்பயணத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். [6] ஃப்ரீயோபீடியா பாரம்பரிய சுற்றுப்பயணம் என்பது ஃப்ரீமண்டிலில் நடைப்பயணங்கள் மற்றும் தடங்கள் ஆகியவை நகரத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட ஒன்றாகும். [7]

ஃப்ரீமண்டில் நகர மேயர், ஃப்ரீமண்டில் சொசைட்டியின் செயலர் & ஆஸ்திரேலிய விக்கிமீடியாவின் அதிபர் ஆகியோர் ஃபிரீயோபீடியாவை நிறுவுகின்றனர்

26 மே 2013 அன்று இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு W D மூர் & கோ வேர்ஹவுஸ்ஸில் நடந்தது. [1][8]ஃப்ரீமண்டில் கலைகள் மையம் மற்றும் ரவுண்ட் ஹவுஸ் ஆகியவை முதல் தளங்களில் சேர்க்கப்பட்டன. [8]

விக்கிபீடியாவில் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் திட்டத்தின் உந்து சக்தியும் விக்கிபீடியன் ஆசிரியர்களின் பணியிலிருந்து வந்தவை. பின்னர் உள்ளூர் குழுக்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் இந்த திட்டத்தை ஆதரித்தனர், இருப்பினும் திட்டத்தின் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் பராமரிப்பு விக்கிபீடியர்களிடம் உள்ளது. ஃப்ரீமண்டில் சொசைட்டி தன்னார்வலர்கள், நோட்ரே டேம் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஃப்ரீமண்டில் போர்ட் ஆணையம் ஆகியோரால் தகடுகளை நிறுவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிந்தையவர்கள் தங்களது சொந்த எட்டு தகடுகளை, நீல பிளாஸ்டிக்கினால் தயாரித்தனர், மேலும் (மார்ச் 2014 நிலவரப்படி) அவற்றை விக்டோரியா க்வே மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்தைச் சுற்றி [புதுப்பித்தல் தேவை] நிறுவுகின்றனர்.[9]

ஃப்ரீமண்டில் சொசைட்டி மற்றும் விக்கிமீடியா ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பு உள்ளது, இதற்கு சிட்டி ஆஃப் ஃப்ரீமண்டில் , மாநில பதிவேடுகள் அலுவலகம், ஃப்ரீமண்டில் வர்த்தக மேம்பாட்டு மாவட்டம், ஃப்ரீமண்டில் துறைமுக ஆணையம் மற்றும் ஃப்ரீமண்டிலில் உள்ள பிற நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன. இந்த திட்டம் ஹெரிடேஜ் கவுன்சிலின் 2014 மேற்கு ஆஸ்திரேலிய பாரம்பரிய விருதுகளில் இறுதிப் போட்டியில் நுழைந்து இருந்தது, மேலும் இதேபோன்ற திட்டத்தை டூடியாய்பீடியா, டூடியேயில் உருவாக்க ஊக்கமளித்தது. [10][11] [12][13]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Fremantle’s heritage enters the digital age". Local Government Focus (LG FOCUS (AUS)). June 2013. பன்னாட்டுத் தர தொடர் எண்:0819-470X. https://www.lgfocus.com.au/editions/2013-06/fremantles-heritage-enters.php. பார்த்த நாள்: 6 July 2014. 
  2. "Wikipedia: How a project launched in Monmouth has gone global". WalesOnline. 31 January 2013. http://www.walesonline.co.uk/news/local-news/wikipedia-how-project-launched-monmouth-2503957. பார்த்த நாள்: 12 December 2013. 
  3. McCarthy, James (31 January 2013). "It's the Smart Way to Put Your Town Firmly on the Map and in the Picture; A Project Wikipedia Launched in Monmouth Has Gone Global - with Copycat Projects Springing Up from Prague to Australia. One's Even Planned for Cardiff, as James McCarthy Reports". The Western Mail (Cardiff, Wales) இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212084232/http://business.highbeam.com/3682/article-1G1-317078018/smart-way-put-your-town-firmly-map-and-picture-project. பார்த்த நாள்: 12 December 2013. 
  4. "Australian first for Fremantle heritage". City of Fremantle. May 2013. Archived from the original on 23 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  5. "Freopedia on the Streets of Freo". 96FM. Archived from the original on 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  6. "Freopedia Heritage Tour". Fremantle Story. Archived from the original on 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  7. "Fremantle walking trails". City of Fremantle. Archived from the original on 19 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 22 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 "App makes us tour guides". Cockburn Gazette. 28 May 2013 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216062617/http://www.inmycommunity.com.au/news-and-views/local-news/App-makes-us-tour-guides/7645470/. பார்த்த நாள்: 12 December 2013. 
  9. "QR codes for VQ". Portfolio (Fremantle Port Authority). March 2014 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Q1CcF5DX?url=http://www.fremantleports.com.au/News/Newsletters/Portfolio%20newsletters/Portfolio%20March%202014.pdf. பார்த்த நாள்: 2 June 2014. 
  10. Government of Western Australia(5 March 2014). "Finalists announced for State Heritage Awards". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 July 2014.
  11. Heritage Council of Western Australia (2014). "Finalists". 2014 Western Australian Heritage Awards. Government of Western Australia. Archived from the original on 5 July 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014.
  12. Mark Wallace; RPS Australia Asia Pacific (15 May 2014). "Toodyay Economic Development Plan" (PDF). Shire of Toodyay Special Concept Forum Program. Shire of Toodyay. p. 42. Archived from the original (PDF) on 5 July 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014. Investigate the development of a Freopedia style Wiki Town project for Toodyay
  13. Eberle, Margie (March 2014). "New Toodyaypedia: recording online the way we were" (PDF). The Toodyay Herald (322): p. 9 இம் மூலத்தில் இருந்து 5 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140705015928/http://www.toodyayherald.com.au/Papers/322-1.pdf. பார்த்த நாள்: 5 July 2014. 
  • Craig Franklin, President of Wikimedia Australia. Interview with Steve Gordon. The Way We Were. 26 May 2013.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீயோபீடியா&oldid=3791473" இலிருந்து மீள்விக்கப்பட்டது