பார்பாரா பவுல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பாரா பவுல்சன்
Barbara Paulson
(இடமிருந்து வலம்) பவுல்சன், விக்கி வாங்கு மற்றும் எலன் லிங்கு (1980)
பிறப்புபார்பரா இயீன் லூயிசு
(1928-04-11)ஏப்ரல் 11, 1928
கொலம்பஸ் (ஒகையோ), அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 26, 2023(2023-02-26) (அகவை 94)
டி மொயின், அமெரிக்கா
பணிபொறியியலாளர்
வாழ்க்கைத்
துணை
ஆரி முர்ரே பவுல்சன் (1959-2003)
பிள்ளைகள்காரென் பிசபு, கேத்தலின் நட்சன்

பார்பாரா பவுல்சன் (Barbara Paulson) (பிறப்பு: ஏப்பிரல் 11, 1928) நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் முன்னாள் மாந்தக் கணிப்பாளர் ஆவார். அந்த ஆய்வகம் பணியில் அமர்த்திய முதல் பெண் அறிவியலாளரும் இவரே.[1] இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் முதலில் 1948 ஆம் ஆண்டில் கணிதவியலாளராகச் சேர்ந்தார். இவர் ஏவூர்தி தடக் கணக்கீடுகளைக் கையால் செய்யலானார்.[2]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் மாந்தக் கணிப்பாளராக 1948 இல் சேர்ந்தார். அங்கு ஏவூர்தித் தடத்தின் கணக்கீடுகளைச் செய்தார்.[3] ஐவர் தேட்டக்கலம்-1 இன் ஏவும் குழுவில் 1958 இல் சேர்ந்தார். இது சோவியத் ஒன்றியத்துடனான விண்வெளிப் போட்டியில் ஏவிய முதல் ஏவூர்தியாகும். இவர் தன் பணியினை மிகவும் அருகிய கருவிகளைக் கொண்டே செய்தார். ஓரெழுதுகோல், ஒளிமேடை, வரைபடத்தாள் மட்டுமே பயன்படுத்தினார்.[4]

அறுதியாக இவர் அந்த ஆய்வக மேற்பார்வையாளர் ஆனார்.[5]

ஏற்பும் தகைமையும்[தொகு]

பவுல்சன் 1993 இல் ஓய்வு பெற்றார். நதாலியா கோல்ட் 2016 இல் ஏவூர்திப் பெண்களின் எழுச்சி, எனும் நூலைப் பவுல்சன் பற்றியும் பிற நாசாவின் பெண் பணியாளர்களைப் பற்றியும் எழுதி வெளியிட்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holt, Nathalia (2016). Rise of the rocket girls : the women who propelled us, from missiles to the moon to Mars (First ed.). New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0316338923. இணையக் கணினி நூலக மைய எண் 917345188.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. "Meet The 'Rocket Girls,' The Women Who Charted The Course To Space" (in en). NPR.org. 2016-04-05. https://www.npr.org/2016/04/05/473099967/meet-the-rocket-girls-the-women-who-charted-the-course-to-space. 
  3. Holt, Nathalia (2016-06-01). "The Women Behind the Jet Propulsion Laboratory" (in en-US). The Atlantic. https://www.theatlantic.com/science/archive/2016/06/the-women-behind-the-jet-propulsion-laboratory/482847/. 
  4. "Meet The 'Rocket Girls,' The Women Who Charted The Course To Space" (in en). NPR.org. 2016-04-05. https://www.npr.org/2016/04/05/473099967/meet-the-rocket-girls-the-women-who-charted-the-course-to-space. 
  5. Shavin, Naomi (2016-04-15). "NASA’s "Rocket Girls" Are No Longer Forgotten History" (in en). Smithsonian. https://www.smithsonianmag.com/science-nature/nasas-rocket-girls-are-no-longer-forgotten-history-180958791/. 
  6. Raymond, Laurel (2016-05-19). "The incredible story of NASA's forgotten 'Rocket Girls'" (in en-US). ThinkProgress. https://thinkprogress.org/the-incredible-story-of-nasas-forgotten-rocket-girls-5ece05972989/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரா_பவுல்சன்&oldid=3957914" இலிருந்து மீள்விக்கப்பட்டது