பாபு பயணிகள் இரயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு பயணிகள் இரயில்
Babu Passenger
கண்ணோட்டம்
வகைநகரங்களிடை இரயில்
முதல் சேவை1983
நடத்துனர்(கள்)பாக்கித்தான் இரயில்வே
வழி
தொடக்கம்லாகூர் சந்திப்பு
முடிவுவாசிராபாத் சந்திப்பு
ஓடும் தூரம்103 கிலோமீட்டர்
சராசரி பயண நேரம்2 மணி, 5 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்205UP (லாகூர்→வாசிராபாத்)
206DN (வாசிராபாத்→லாகூர்)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)சிக்கனம்
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை உரிமையாளர்பாக்கித்தான் இரயில்வே

பாபு பயணிகள் இரயில் (Babu Passenger) லாகூருக்கும் வாசிராபாத்துக்கும்[1] இடையில் செல்லும் பயணிகள் இரயில் ஆகும். பாக்கித்தான் இரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் இரயிலை இயக்குகிறது. இரு நகரங்களுக்கிடையிலான 103 கிலோமீட்டர் (64 மைல்) தொலைவை இந்த இரயில் தோராயமாக 2 மணி 5 நிமிடங்களில் கடக்கிறது. பாக்கித்தானின் பிரதானமான இரயில் வழித்தடங்களில் ஒன்றான கராச்சி-பெசாவர் இரயில் பாதையின் நீட்சிப் பாதையில் பாபு பயணிகள் இரயில் பயணம் செய்கிறது.

பாதை[தொகு]

கராச்சி-பெசாவர் இரயில் பாதையில் லாகூர்-வாசிராபாத் நகரங்களுக்கு இடையில் உள்ள பாதை.

நிறுத்தங்கள்[தொகு]

  • லாகூர் சந்திப்பு
  • பதாமி பாக்
  • சாக்தாரா பாக்
  • கலா சா காக்கு
  • முரித்கே
  • சாதோக்
  • காமோக்கு
  • எமினாபாத்
  • குச்ரன்வாலா சிட்டி
  • குச்ரன்வாலா
  • குச்ரன்வாலா கண்டோன்மெண்ட்
  • காக்கார் மண்டி
  • தாவுங்கால்
  • வாசிராபாத் சந்திப்பு [2].

வசதிகள்[தொகு]

படுக்கை வசதிகளுடன் சிக்கனக் கட்டணச் சேவையாக இப்பயணிகள் இரயில் இயக்கப்படுகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_பயணிகள்_இரயில்&oldid=2604277" இலிருந்து மீள்விக்கப்பட்டது