பாண்டியர் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை மீன்களுடன் பாண்டியர் கொடி

பாண்டியர் கொடி என்பது தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களின் கொடி ஆகும் இது ஒற்றை மீனாகவோ அல்லது இரட்டை மீன்களாகவோ இருக்கலாம்.[1][2] ஆனால் கொடியைப் பற்றிய குறிப்பும் விளக்கமும் இல்லை. எனவே, ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட எந்த பாண்டியர் கொடிகளும் உவமைக்காக உருவாக்கப்பட்டவையே. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று உவமைகளின் படி இரட்டை மீன் அல்லது ஒற்றை மீன் கொண்ட கொடிகள் இருந்துள்ளன.[3][4]

பாண்டியரின் இரட்டை மீன் சின்னம் உத்தம சோழனின் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

12 ஆம்-நூற்றாண்ல் வாழ்ந்த தமிழ் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் பாடல் வரிகள் சோழர் கொடியுடன் ஒப்பிட்டு பாண்டியரின் மீன்கொடியை குறிப்பிடுகிறது.[5][6]

இந்த வரிகளுக்குப் பொருள் "மீன் கொடி (பாண்டியர் கொடி) புலிக் கொடிக்கு (சோழர் கொடி) சமமானதா?"

மேலும் சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், பாண்டியனின் கொடி கயல் கொடி என்பதைச் சுட்டுகிறது.

 
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
'நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; 155

புராணம்[தொகு]

பாண்டிய மன்னன் முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியனின் இரட்டை மீன் சின்னம் இலங்கை, திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் கோயிலில் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

ஒரு புராணக் கதையின்படி இந்துப் பெண் கடவுளான மீனாட்சி ( மீன்களைப் போன்ற கண்கள் கொண்டவள்) பாண்டிய மன்னனின் மகளாக பிறந்தார். பாண்டியர் சின்னமான மீன் அவர்களின் நாணயம் உள்ளிட்டவற்றில் அவர்களின் மரபைக் காட்டும்விதமாக இடம்பெற்றது. மீனாட்சி (மீன்+ஆக்ஷி ) என்ற சொல் இரண்டு சொற்களின் சேர்க்கை அதாவது தமிழ்ச் சொல்லான மீன் மற்றும் சமசுகிருத சொல்லான ஆக்ஷி (கண்).[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Masterpieces in metal". Institute For Oriental Study, Thane. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  2. Nelson, J.H. Political History of the Madura Country. Asian Educational Services. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  3. Walter Codrington, Hubert. Ceylon Coins and Currency. Asian Educational Services. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  4. History & Civics For Vi (Tn). Tata McGraw-Hill Education. {{cite book}}: More than one of |authorlink= and |author-link= specified (help)
  5. "ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும்". Tamil Wikisource. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  6. "எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்". Tamil Virtual Academy. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
  7. "Sri Meenakchi (Parvathi)". Hindu Society of Minnesota. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியர்_கொடி&oldid=3562660" இலிருந்து மீள்விக்கப்பட்டது