பாடாங் பெசார் (மக்களவைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாடாங் பெசார் (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாடாங் பெசார் (P001)
மக்களவைத் தொகுதி
மலேசிய மக்களவை
Padang Besar (P001)
Federal Constituency in Perlis
பெர்லிஸ்
பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
வட்டாரம்பெர்லிஸ்
முக்கிய நகரங்கள்பாடாங் பெசார்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்ருசுதான் ருசுமி
(Rushdan Rusmi)
வாக்காளர்கள் எண்ணிக்கை60,192
தொகுதி பரப்பளவு450 ச.கி.மீ.
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பாடாங் பெசார் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (8.38%)
  மலாயர் (86.67%)
  இதர இனத்தவர் (2.97%)

பாடாங் பெசார் (மலாய்: Padang Besar; ஆங்கிலம்: Padang Besar; சீனம்: 巴东勿刹; என்பது மலேசியா. பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P001) ஆகும்.

இந்தத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முன்பு இந்தத் தொகுதி கங்கார் (மக்களவைத் தொகுதி)யின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது

1995-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) இந்தத் தொகுதி பிரதிநிதிக்கப் படுகிறது.

பொது[தொகு]

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் மலேசிய இஸ்லாமிய கட்சியின் சார்பில் ருசுதான் ருசுமி (Rushdan Rusmi) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியின் பரப்பளவு 450 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 60,192 வாக்காளர்கள் உள்ளனர்.[1]

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், மலேசியா விடுதலை பெற்ற 1957-ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 14 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதி பாரிசான் கூட்டணியின் கோட்டையாக விளங்கி வந்தது.

பாடாங் பெசார் நாடாளுமன்றத் தொகுதி[தொகு]

பாடாங் பெசார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கங்கார் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
9-ஆவது 1995–1999 அசுமி காலித்
(Azmi Khalid)
பாரிசான் (அம்னோ)
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 சகிடி சைனுல் அபிதின்
(Zahidi Zainul Abidin)
14-ஆவது 2018–2022
15-ஆவது 2022–தற்போது ருசுதான் ருசுமி
(Rushdan Rusmi)
பெரிக்காத்தான்
(பாஸ்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க[தொகு]

வார்ப்புரு:பெர்லிஸ் மக்களவைத் தொகுதிகள் வார்ப்புரு:மலேசிய தேர்தல் தொகுதிகள்