பயனர்:Rakeshdcgs/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ஜாவா" என்பது மிகவும் பிரபலமான மென்பொருள் உருவாக்கி. தற்காலத்தில் பெரும்பாலான மின் கருவிகள் ஜாவாவை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகின்றன. ஜாவா சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்த்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் 1991 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . ஜாவாவின் முதல் பதிப்பு (ஜாவா 1.0) 1995 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஜாவா பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாகும் (object oriented programming language), இதன் பெரும்பாலான அமைப்புகள் C, C++ ஐ ஒத்து காணப்படும்.


தளம் சாரத்தன்மை (PLATFORM INDEPENDENT)[தொகு]

ஜேம்ஸ் கோஸ்லிங்

ஜாவாவின் மிக முக்கியமான பண்பு தளம் சாரத்தன்மை ஆகும். C, C++ போன்ற கணினி நிரலாக்க மொழிகளை தொகுக்கும் போது (compile) அவை குறிப்பட்ட தொகுக்கும் இயந்திரத்தின் தன்மைக்கேற்ப அமையும், ஆனால் ஜாவா தொகுக்கப்படும்போது அவை பிளட்பொர்ம் இண்டேபெண்டேன்ட் ப்பைட் கோட் (platform independent byte code) எனப்படும் தளம் சாரா அமைப்பை உருவாக்கும். இந்த ப்பைட் குறியீடானது ஜாவா விர்சுவல் மெசின் (virtual Machine (JVM)) எனப்படும் ஜாவா மெய்நிகர் இயந்திரத்தால் பல்வேறு தளங்களில் விளக்கப்பட்டுகின்றன.


ஜாவா மெய்நிகர் இயந்திரம் (JAVA VIRTUAL MACHINE (JVM))[தொகு]

ஜாவா அமைப்பில் ஜாவா மெய்நிகர் இயந்திரம் மிக முக்கிய பங்குவகிக்கின்றது. இதில் ஜாவா நிரல்களை இயக்க சூழல் உள்ளது. ஜாவா மெய்நிகர் இயந்திரமானது ஒரு மென்பொருளாகும் இவை வன்பொருள் (Hardware) மற்றும் இயக்கு தளம் (Operating System) ஆகியவற்றின் மீது செயல்படுத்தப்படும். ஜாவா மூல குறியீடு (source code) அதாவது .java கோப்பானது செயல்படுத்தப்படும் போது இவை ப்பைட் குறியீடுகளாக (Byte Codes) மாற்றப்பட்டு பின் .class கோப்பிற்குள் வைக்கப்படும். இந்த ப்பைட் குறியீடுகளானது பின் ஜாவா மெய்நிகர் இயந்திரதால் செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே இந்த ப்பைட் குறியீடுகளானது ஜாவா மெய்நிகர் இயந்திரதின் எந்திர மொழி(Machine Language) எனப்படுகின்றன.


பொருள் சார்ந்த நிரலாக்கம் (OBJECT ORIENTED PROGRAMMING)[தொகு]

ஜாவா ஓர் பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாகும். இவை பின்வரும் தனிச் சிறப்புகளைக் கொண்டுள்ளன.

  • ==== எளிமையானது ====
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rakeshdcgs/மணல்தொட்டி&oldid=1883518" இலிருந்து மீள்விக்கப்பட்டது