உள்ளடக்கத்துக்குச் செல்

பசு அணைப்பு தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசு அணைப்பு தினம்
Cow Hug Day
கடைபிடிப்போர்இந்தியா
வகைதேசியம்
முக்கியத்துவம்பசுக்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் நேர்மறை, உணர்ச்சி வளம் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரித்தல்
கொண்டாட்டங்கள்மாடுகளை கட்டிப்பிடித்து, வழிபடுவது, தன்படம் எடுப்பது
நாள்14 பிப்ரவரி
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை2023
மூலம் தொடங்கப்பட்டதுஇந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய அரசு

பசு அணைப்பு தினம் (Cow Hug Day) என்பது பிப்ரவரி 2023 முதல் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாகும். இது பசுக்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் அன்பைக் காட்ட ஊக்குவிக்கிறது. இந்திய விலங்குகள் நல வாரியம்[1] அறிவிப்பில், காதலர் தினத்திற்குப் பதிலாகப் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தினை[2][3] கடைப்பிடிக்குமாறு இந்தியா முழுவதும்[4] பசுப் பிரியர்களைக் கேட்டுக்கொண்டது.[5] இதன் மூலம் உணர்ச்சி வளம் அதிகரிக்கும் என்றும் "நமக்குத் தனிப்பட்ட மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரங்கள் அதிகரித்த நிலையில் பசு அணைப்பு தினத்தைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டது.[6]

பசுவை அரவணைத்தல்[தொகு]

அமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்று முழு அடைப்பின்போது, பசுக்களை அரவணைப்பதன் மூலம் மனநிறைவு மற்றும் அமைதியின் அனுபவங்களைச் சிலர் பெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian gov't says hug cows on Valentine's Day, Twitter cracks up". www.aljazeera.com.
  2. Sharma, Ashok (9 February 2023). "Indian government asks people to hug cows on Valentine's Day". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  3. "Embracing a controversy: What politicians said on 'Cow Hug Day'". India Today.
  4. "Celebrate February 14 as 'Cow Hug Day': Animal Welfare Board of India". February 8, 2023.
  5. "Valentine's Day thing of past? Govt says celebrate 'Cow Hug Day' on Feb 14". Hindustan Times. February 8, 2023.
  6. "No 'Cow Hug Day' On February 14, Centre Withdraws Appeal". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  7. Lee, Bruce Y. "Cow Cuddling Services Are More Popular During Covid-19 Coronavirus Pandemic". Forbes.
  8. Gormly, Kellie B. (8 March 2021). "Cow cuddling has become a thing for lonely hearts in the pandemic". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  9. Mala, Elisa (July 12, 2019). "Move Over, Therapy Dogs. Hello, Therapy Cows" – via NYTimes.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசு_அணைப்பு_தினம்&oldid=3655639" இலிருந்து மீள்விக்கப்பட்டது