ந. முருகேசபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந.முருகேசபாண்டியன் (பிறப்பு: 1957[1]) மதுரை நகரில் பிறந்த இவர், சமயநல்லூர் கிராமத்தில் வளர்ந்தார். பிறந்த நாள் 26-12-1957. இவர் எழுபதுகளின் இறுதியில் வெளியான ’தேடல்’ இதழில் கவிஞராகச் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமானவர் ஆவார். இலக்கிய விமர்சனத் தளத்தில் இயங்கிவரும் இவர், உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பத்தி, பரவலாகக் கவனம் பெற்றது. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் (2003) சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. சொற்கள் ஒளிரும் உலகம் (2007) நூலானது 2007 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புத்தகப் பதிப்பாளர் சங்கம் (பப்பாசி), 2020 ஆம் ஆண்டு, உரைநடைப் பிரிவில் இவருக்குக் கலைஞர் பொற்கிழி விருது வழங்கியுள்ளது.

இவர், இளைய தலைமுறையினருக்குப் பழந்தமிழ்ப் படைப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில்"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற நூலில் 41 சங்க இலக்கிய பெண் கவிஞர்கள் தொடங்கி , காரைக்கால் அம்மையார், ஆண்டாள் வரை எல்லோருடைய பாடல்களையும் தொகுத்து எளிய உரை எழுதியிருக்கிறார். ([2]) கடந்த முப்பதாண்டுகளாகக் காத்திரமான இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். இதுவரை இருநூறுக்கும் கூடுதலான நூல்களுக்கு மதிப்புரைகள் எழுதிப் படைப்பாளர்கள் பற்றிய பேச்சுகளை உருவாக்கியுள்ளார். இலக்கியத் திறனாய்வு மட்டுமின்றி, சமகாலத் தமிழர்களின் சமூகம், அரசியல், பண்பாட்டுப் பிரச்சினைகளை விவாதிக்கும் கட்டுரைகளைச் சமூக அக்கறையுடன் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர்.  அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்று அழுத்தமான நம்பிக்கையுடன் அரசியல் தளத்தில் தொடர்ந்து செயல்படுகின்றார்.

இவர், தன்னுடைய சொந்த அனுபவங்கள்மூலம் சமயநல்லூர் என்ற ஊரின் சமூகம், பண்பாடு சார்ந்த சூழல்களையும் அவற்றை உருவாக்கிய காரணிகளையும் ’ கிராமத்து தெருக்களின் வழியே’ என்ற நூலில் பதிவாக்கியுள்ளார். ஊரின் சாட்சியாகத் தன்னை அறிந்திடும் நிலையில் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை அழுத்தமாகப் பதிவாக்கியிருப்பது, பண்பாட்டு வரலாற்றுரீதியில் தனித்துவமானது. தமிழர் வாழ்க்கை காலந்தோறும் எப்படியெல்லாம் உருமாறி வருகிறது என்று சுட்டியிருப்பது நூலின் சிறப்பம்சமாகும்.

            ”எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. எந்தவொரு படைப்பும் காலங்கடந்து நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு லாபிகளின் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட படைப்புகள், சில பத்தாண்டுகளில் கவனிப்பு இல்லாமல் போய்விடுகின்றன. காலங்கடந்த இலக்கியப் படைப்பைப் பற்றிய பிரமை எழுத்தாளர் பலரையும் ஆட்டிப் படைக்கின்றது. படைப்பாளரே இல்லாதபோது அவர் எழுதிய படைப்பு புகழோடு நிலைத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. கடவுளுக்குக்கூட அல்காலம் செல்காலம் பற்றிச் சொல்கிற புலவர் மரபில்வந்த நாம் காலத்தால் அழியாத படைப்பு என்று பெருமிதம்கொள்ள என்ன இருக்கிறது? படைப்புகள் காணாமல் போகும் காலத்தில் விமர்சனங்களும் காணாமல் போய்விடும். எதிர்காலத்தில் என்னுடைய விமர்சனப் புத்தகங்கள், இலக்கிய வரலாற்றில் வெறும் பதிவுகளாகிவிடும்” என்று அண்மையில் ’புத்தகம் பேசுது’ நேர்காணலில் இவர் குறிப்பிட்டுள்ளது, கவனத்திற்குரியது.

புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும் நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவருடைய நெறியாள்கையின் கீழ் 24ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

தற்சமயம் மதுரையில் வசித்துவரும் இவர் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் என்ற காலாண்டிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.

தமிழ்த் திறனாய்வை நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகின்ற இவர் இலக்கியக் கூட்டங்களில் திறம்பட உரையாற்றுவதில் வல்லவர். புத்தக வாசிப்பின் வழியாகத் தன்னிருப்பை அடையாளம் காண்கிற இவர் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார்.

எழுதிய நூல்கள்[தொகு]

இலக்கியத் திறனாய்வு

1. பிரதிகளின் ஊடே பயணம்(55 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: மருதா பதிப்பகம்,2003.

2. தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் (திறனாய்வு).சென்னை: தி பார்க்கர்,2004.

3. சொற்கள் ஒளிரும் உலகம்(விமர்சனக் கட்டுரைகள்). திருவண்ணாமலை: வம்சி புக்ஸ்.2006

4. திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் ( திறனாய்வு). சென்னை; வ,உ.சி.நூலகம். 2007.

.5. இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்(விமர்சனக் கட்டுரைகள்), திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2009.

6. என் பார்வையில் படைப்பிலக்கியம்(58 புத்தகங்களின் மதிப்புரைகள்).சென்னை: அம்ருதா, 2009

7. புத்தகங்களின் உலகில்(38 புத்தகங்களின் மதிப்புரைகள்). சென்னை: பாவை பதிப்பகம்,2010.

8. மறுவாசிப்பில் மரபிலக்கியம்:சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை(விமர்சனக் கட்டுரைகள்).சென்னை: நற்றிணை பதிப்பகம்,2011.

9. நவீனப் புனைகதைப் போக்குகள்.( விமர்சனக் கட்டுரைகள்). சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015

10.எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?. (விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2015

11அண்மைக்காலக் கவிதைப்போக்குகள்:வரலாறும் விமர்சனமும். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2016

12. மறுவாசிப்பில் செவ்விலக்கியப் படைப்புகள். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2015.

13. விமர்சகர்கள் படைப்பாளர்கள்: படைப்பாளுமைகள் பற்றிய கட்டுரைகள். சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம்,2016.

14.புனைவு எழுத்துகளின் மறுபக்கம்:சமகாலத்திய நாவல்கள்,சிறுகதைகள்  குறித்த விமர்சனம். சென்னை: உயிர்மை பதிப்பகம்.2017.

15. பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர். கோவை: விஜயா பதிப்பகம்.2017.   மறு பதிப்பு: என்.சி.பி.ஹெச். சென்னை,2022.     

16. எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? (விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு). சென்னை: டிஸ்கவரி புக்பேலஸ்.2019  

17. நவீன சிறுகதைப் படைப்பாளுமைகள். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2022.  

18. மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள். சென்னை:என்.சி.பி.ஹெச், பதிப்பகம்,2023.

19. திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள் (விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு). சென்னை: டிஸ்கவரி பதிப்பகம்,2023.

19. தமிழ் மொழியும் சமூக உருவாக்கமும். சென்னை: மலர் புக்ஸ்.2023

20. சிறுகதைகளின் உலகில். தேனி: பன்முகமேடை வெளியீடு. 2023

21. கவிதைகளின் உலகில். சென்னை: வேரல் பதிப்பகம், 2023

22. மறுவாசிப்பில் இலக்கிய விமர்சனம். சென்னை: டிஸ்கவரி பதிப்பகம், 2024.

23. கட்டுரைகளின் உலகில். ஜோலார் பேட்டை: பரிதி பதிப்பகம், 2024.

24. நாவல்களின் உலகில். சென்னை; பாரதி புத்தகாலயம், 2024.

திரைப்பட விமர்சன நூல்

1.தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும். சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ், 2016.

மானிடவியல்[தொகு]

1. கிராமத்து தெருக்களின் வழியே:தமிழ்ப் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் ஆவணம்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் , 2017.

2. மதுரை மாநகர வெளியில்: அறிந்ததும் அறியாததும்- மதுரை நகரம் பற்றிய பதிவுகள். சென்னை: என்சிபிஹெச், 2024.

இனவரைவியல்[தொகு]

1. குடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் ஆய்வு. சென்னை: உயிர்மை பதிப்பகம் ,2009.மறு பதிப்பு: என்.சி.பி.ஹெச். சென்னை,2018.

மொழிபெயர்ப்பியல்[தொகு]

1.மொழிபெயர்ப்பியல். திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2008. மறு பதிப்பு: என்.சி.பி.ஹெச். சென்னை,2016.

2. அடையாளத்தை அழிக்கும் மொழிபெயர்ப்பு அரசியல். சென்னை: பாரதி புத்தகாலயம், 2024.

அரசியல்

1.  கலைஞர் என்றொரு ஆளுமை. சென்னை: டிஸ்கவரி புக்    பேலஸ் பதிப்பகம்,2018.

2. இந்தியா புண்ணிய பூமியா? ஞான பூமியா? ஆன்மீக நாடா?. சென்னை: டிஸ்கவரி பதிப்பகம்,2024

நண்பர்கள் பற்றிய நூல்

1.என் இலக்கிய நண்பர்கள்( 15 இலக்கியவாதிகள் பற்றிய பதிவுகள்). சென்னை: உயிர்மை பதிப்பகம்,2006.

பொதுக் கட்டுரைகள்[தொகு]

1. தமிழர் வாழ்க்கையில் பூக்கள்( கட்டுரைகளின் தொகுப்பு). சென்னை:என்.சி.பி.ஹெச், 2014.விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு. சென்னை: வேரல் பதிப்பகம், 2024.

2.போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம்(அரசியல் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016

3.தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்(பண்பாட்டுக் கட்டுரைகள்).சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016.

4. காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்.(சமூக விமர்சனக் கட்டுரைகள்) சென்னை: உயிர்மை பதிப்பகம்,2018.

சிறுகதைத் தொகுதி[தொகு]
1. மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும்.சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்,2019.

நேர்காணல்

1.பிரபஞ்சன் நேர்காணல்கள். சென்னை: டிஸ்கவரி பதிப்பகம்,2019.

2. ஆளுமைகளின் பேச்சுகள் மறுபேச்சுகள்: நேர்காணல்கள். சென்னை: டிஸ்கவரி பதிப்பகம், 2024.

பழைய நூல் பதிப்பு

1.  ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம். சே.ப நரசிம்மலு நாயுடு( முதல்  பதிப்பு: 1889). சென்னை: டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்,2018.          

தொகுப்பாசிரியராகத் தொகுத்த நூல்கள்[தொகு]

1. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள். சென்னை: மருதா பதிப்பகம்,2005. மறு பதிப்பு: சென்னை: டிஸ்கவரி புக்    பேலஸ் பதிப்பகம். 2023

2 அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்: சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை. நாகர்கோவில்; காலச்சுவடு பதிப்பகம், 2008. மறு பதிப்பு: சென்னை: என்சிபிஹெச் பதிப்பகம்,2014.

3. பிரபஞ்சன் கட்டுரைகள்.நாகர்கோவில்:காலச்சுவடு பதிப்பகம், 2009. மறுபதிப்பு:சென்னை:டிஸ்கவரி புக் பேலஸ்,2016

4. நாஞ்சில்நாடன் சிறுகதைகள். திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம்,2011.

5. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்(2017). சென்னை: என்.சி.பி.ஹெச்.  பதிப்பகம்.

6. நாஞ்சில்நாடன் தேர்ந்தெடுத்த  சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக்   பேலஸ் பதிப்பகம். 

7.  கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக்  பேலஸ் பதிப்பகம்.      

8.  என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்(2018). சென்னை: டிஸ்கவரி புக்  பேலஸ் பதிப்பகம்.

9.   வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.(2018). சென்னை: டிஸ்கவரி புக்  பேலஸ் பதிப்பகம்.

10. சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள். .(2018). சென்னை: டிஸ்கவரி புக்    பேலஸ் பதிப்பகம்.                              

11. ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள். (2018). சென்னை: டிஸ்கவரி புக்    பேலஸ் பதிப்பகம். 

12.  ஆண்டாள் பாடல்கள்.(2019) சென்னை: டிஸ்கவரி புக்   பேலஸ் பதிப்பகம்.                                 

13.  காரைக்காலம்மையார் பாடல்கள்(2019). டிஸ்கவரி புக்   பேலஸ்  பதிப்பகம்.  

14.  கோபி கிருஷ்ணன் தேர்ந்தெடுத்த  சிறுகதைகள்(2021). சென்னை: டிஸ்கவரி புக்   பேலஸ் பதிப்பகம்.  

15. உலகக் காதல் கதைகள். சென்னை: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 2023

16. தமிழகக் காதல் கதைகள். சென்னை: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,2023                         

                                           

பதிப்பாசிரியராகப் பதிப்பித்த மொழிபெயர்ப்பு நூல்கள்

               1. பாசிசம்(2006). கெவின் பாஸ்மோர். அ.மங்கை.. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்  பதிப்பகம்.                              

               2. ஃப்ராய்ட்(2005). அந்தனி ஸ்டோர். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்  பதிப்பகம்.                 

               3. உலகமயமாக்கல்(2006). மான்ஃபிரட் பி. ஸ்டெகர். க. பூரணச்சந்திரன். (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் 

      பதிப்பகம்.

  4. பௌத்தம்(2005). தாமியென் கோவ்ன். சி.மணி (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.

  5. வரலாறு(2005). ஜான் எச்.அர்னால்டு. பிரேம் (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்   பதிப்பகம்.                 

              6.  பாசிசம்(2005). மைக்கேல் கேரிதர்ஸ். சி.மணி. (மொ-பெ). புத்தாநத்தம்: அடையாளம்    பதிப்பகம்.

                                   
இலக்கிய விருதுகள்[தொகு]
ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி, சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.3000/- பரிசு பெற்றது.[தொகு]

முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003 ஆம் ஆண்டில் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது.

திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய சொற்கள் ஒளிரும் உலகம் புத்தகம் 2007-ஆம் ஆண்டின் சிறந்த விமர்சன நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தொலைக்காட்சி அரசியல் ( உயிர் எழுத்து,2012,செப்டம்பர்) கட்டுரை, 2012ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரையாகச் சின்னக் குத்தூசி அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10,000/- பரிசு பெற்றது.

சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் 2014 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகர் எனத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது.

மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் நூலினை 2017 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கியது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை அமைப்பு, 2019 ஆம் ஆண்டில் திறனாய்வுச் செம்மல் என்ற பட்டம் அளித்தது.

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 இல் வாழ்நாள் சாதனையாளர்  விருது வழங்கியது.

தமிழ்நாடு, புத்தகப் பதிப்பாளர் சங்கம்(பப்பாசி), 2020 ஆம் ஆண்டு, உரைநடைப் பிரிவில் கலைஞர் பொற்கிழி விருது வழங்கியது.

மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நூலினை 2024 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாகப் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் தேர்ந்தெடுத்துச் சீனு சின்னப்பா இலக்கிய விருது வழங்கியது.


கல்வி கற்ற நிறுவனங்கள்

ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, சமயநல்லூர்

அரசு உயர்நிலைப் பள்ளி, சமயநல்லூர்

ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி


பணியாற்றிய நிறுவனங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்(15 மாதங்கள்)

திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்( 10 மாதங்கள்)

சரஸ்வதி மெட்ரிகுலேசன் பள்ளி, தேனி( 3 மாதங்கள்)

கணேசர் கலை, அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி( 28 ஆண்டுகள்)

  1. தலைப்பு எழுத்துக்கள் ===

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
  2. கிராமத்துத்தெருக்களின் வழியே நூலில் ஆசிரியர் குறிப்பு 2

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழச்சி தங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழாவில் ந.முருகேசபாண்டியன்  பேச்சு https://www.youtube.com/watch?v=IcF-9HGTp6g

மதுரை உணவு நகரம் https://www.facebook.com/.../posts/59343651733479... T

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._முருகேசபாண்டியன்&oldid=3960621" இலிருந்து மீள்விக்கப்பட்டது