நெடுவாசல் ஜமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'நெடுவாசல் ஜமீன்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "திருவரங்குளம்" பகுதி 'நெடுவாசல்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "பன்றிகொண்டார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1][2]

வரலாறு[தொகு]

1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத முத்தையன் பன்றிக்கொண்டாரின் கீழ் 15 கிராமங்கள் இருந்தன (9532 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 2037 ரூபாய் 6 அணா 6 பைசா ஆகும்.[3]

புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் நெய்வாசல் ஜமீன்கள் இணைந்திருந்தார்கள். அய்யாசாமி பன்றிகொண்டார் அவர்கள், புதுக்கோட்டை மன்னரின் மகள் மங்களாம்பாள் ராஜா அம்மணி சாகிப் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.[4]

ரகுநாத பன்றிகொண்டார் என்பவர் புதுக்கோட்டை மன்னரின் சாகிர்தார் ஆவார். ஜாகிர் (Jagir) என்பது படைத்தலைவர்களின் சேவை கருதி அவர்களுக்கு வழங்கப்படும் சிறிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.[5] கட்டக்குறிச்சி பன்றிகொண்டார் மற்றும் முத்துசாமி பன்றிகொண்டார் , புதுக்கோட்டை மன்னருக்கு எதிராக கலகம் செய்தனர். மக்களை கிளர்ச்சிக்கு தூண்டிய முத்துசாமி பன்றிகொண்டார் புதுக்கோட்டை மன்னரின் சொந்த மைத்துனர் ஆவார்.[6]

நெடுவாசல் பன்றிக்கொண்டார் மற்றும் செரியலூர் பன்றிக்கொண்டார் ஜமீன்கள் சகோதரர்கள் ஆவர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. 319.
  2. "நெடுவாசல்". தினமலர்.
  3. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 91.
  4. Chiefs And Leading Families. 1923. pp. 14.
  5. Gazetter Of Tamil Nadu Pudukkottai District Gopala Krishna Gandhi. 1923. pp. 538.
  6. புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு. 1980. pp. [116].
  7. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (இரண்டாம் தொகுதி). 1989. pp. 116.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுவாசல்_ஜமீன்&oldid=3794625" இலிருந்து மீள்விக்கப்பட்டது