நீகர் எனப்படும் சிமியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீகர் எனப்படும் சிமியோன் என்பவர் திருத்தூதர் பணிகள் நூலில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 13:1இன் படி இவர் அந்தியோக்கியா நகர திருச்சபையில் இருந்த இறைவாக்கினர்கள் மற்றும் போதகர்களுள் ஒருவர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.

— திருத்தூதர் பணிகள் 13:1

நீகர் என்னும் சொல்லுக்கு கருப்பர் என்பது பொருள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kistemaker, Simon J (1990). Acts. Baker Book House. p. 454.