உள்ளடக்கத்துக்குச் செல்

நானாசாகேப் பருலேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானாசாகேப் பருலேகர்
Nanasaheb Parulekar
பிறப்பு(1897-09-20)20 செப்டம்பர் 1897
இறப்பு8 சனவரி 1973(1973-01-08) (அகவை 75)
பணிபத்திரிக்கையாளர்
வாழ்க்கைத்
துணை
சாந்தா செனிவீவ் பொம்மரெட்டு
பிள்ளைகள்1 மகள்

நானாசாகேப் பருலேகர் (Nanasaheb Parulekar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். நாராயண் பிகாச்சி பருலேகர் என்றும் இவர் அறியப்படுகிறார். 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20 ஆம் தேதியன்று பருலேகர் பிறந்தார்.[1] 1932 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தொடங்கப்பட்ட மராத்தி நாளிதழான சகலின் நிறுவன ஆசிரியராகத் திகழ்ந்தார். பிரசு டிரசுட்டு ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.[2]

இன்று, சகல் என்பது புனேவை தளமாகக் கொண்டு இயங்கும் சகல் ஊடகக் குழுமத்தின் முதன்மையான நாளிதழாகும். சகல் டைம்சு மற்றும் கோமண்டாக்கு உள்ளிட்ட செய்தித்தாள்களை இந்நிறுவனம் நடத்துகிறது. சகல் பத்திரிக்கை புனே மாவட்டத்தில் கிட்டத்தட்ட 300,000 பிரதிகளும் மகாராட்டிரா மாநிலத்தில் 1,000,000 பிரதிகளும் விற்பனையாகிறது.[3][4]

இந்திய அரசாங்கம் பருலேகருக்கு குடிமக்கள் விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[5] 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் தேதியன்று நானாசாகேப் பருலேகர் காலமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பருலேகர் பிரெஞ்சுப் பெண்மணியான சாந்தா செனிவீவ் பொம்மரெட்டு என்பவரை மணந்து கொண்டார். பிரபலமான விலங்கு உரிமை ஆர்வலரான கிளாட் லிலா பருலேகர் இத்தம்பதியருக்குப் குழந்தையாவார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Accessions List". 1976. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  2. the birth centenary of founder editor of Marathi daily Sakal and former chairman of Press Trust of India.. Indian Express, 28 July 1998.
  3. "Nanasaheb Parulekar, Biography". Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.
  4. Sakaal Times launched in Pune BS Reporter, பிசினஸ் ஸ்டாண்டர்ட், Pune 7 May 2008.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  6. Nanasaheb Parulekar Media credibility, by S. K. Aggarwal. Mittal Publications, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7099-157-9. p. 228.
  7. "Noted animal rights activist Claude Lila Parulekar passes away". The Hindu. 13 September 2016. http://www.thehindu.com/news/national/other-states/noted-animal-rights-activist-claude-lila-parulekar-passes-away/article9104344.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாசாகேப்_பருலேகர்&oldid=3743658" இலிருந்து மீள்விக்கப்பட்டது