நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018

← 2013 27 பிப்ரவரி 2018 2023 →

நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 இடங்கள்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்85.62%[1]
  First party Second party Third party
  Blank Blank Blank
தலைவர் டி. ஆர். ஜிலியாங் நைபியு ரியோ தெம்ஜென் இம்மா அலாங்
கட்சி நா.ம.மு தே.ஜ.மு.க பா.ஜ.க
கூட்டணி - தே.ச.கூ தே.ச.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பெரேண் வடக்கு அங்கமி-2 அலாங்டக்கி
முந்தைய
தேர்தல்
38 புதிய 1
வென்ற
தொகுதிகள்
26 18 12
மாற்றம் 12 18 11
மொத்த வாக்குகள் 389,912 253,090 153,864
விழுக்காடு 38.8% 25.2 15.3
மாற்றம் 8.2% புதிய 15.3%


முந்தைய முதலமைச்சர்

டி. ஆர். ஜிலியாங்
நா.ம.மு

முதலமைச்சர் -தெரிவு

நைபியு ரியோ
தே.ஜ.மு.க

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018 (Nagaland Legislative Assembly election, 2018) 27 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்றது. இம்மாநிலச் சட்டப் பேரவையின் 60 உறுப்பினர்களுக்கான தேர்தலில், வடக்கு அங்காமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நைபியு ரியோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.[2][3] வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்று நடைபெற்றது.

பின்னணி[தொகு]

நாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 13 மார்ச் 2018 அன்றுடன் முடிய உள்ளததால் இத்தேர்தல் நடைபெறுகிறது. [4] 22 சனவரி 2018ல் நாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் கே. எல். சிசி 12 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5]

11 அரசியல் கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி அறிக்கை வெளியிட்டன.[6]

தேர்தலுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, நாகலாந்தை ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டது.

அதற்கு பதிலாக நைபியு ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது.[7][8]

தேர்தல் முடிவுகள்[தொகு]

3 மார்ச் 2018 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் எந்த கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை இடங்களை பெற இயலவில்லை.[9][10][11] தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளர் நைபியு ரியோ வடக்கு அங்காமி II தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [12]

கட்சிகளும் கூட்டணிகளும் பெற்ற வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % ±% வேட்பாளர்கள் வெற்றி +/−
நாகாலாந்து மக்கள் முன்னணி 58 28 9
தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 17 17
பாரதிய ஜனதா கட்சி 20 12 11
தேசிய மக்கள் கட்சி 25 1 1
ஐக்கிய ஜனதா தளம் 13 1
சுயேட்சைகள் 11 1 7
இந்திய தேசிய காங்கிரசு 18 0 8
தேசியவாத காங்கிரசு கட்சி 6 0 4
ஆம் ஆத்மி கட்சி 3 0
லோக் ஜனசக்தி கட்சி 2 0
மொத்தம் 100.00 196 60 ±0

ஆட்சி அமைத்தல்[தொகு]

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நைபியு ரியோ தலைமையில் நாகாலாந்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும், தங்களுக்கு ஆதரவாக உள்ள 32 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவிடம் ஒப்படைத்தார். [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "75% voter turnout in Meghalaya and Nagaland". Times of India. 28 February 2018. https://timesofindia.indiatimes.com/india/75-voter-turnout-in-meghalaya-and-nagaland/articleshow/63101616.cms. பார்த்த நாள்: 28 February 2018. 
  2. Nagaland Assembly elections 2018: Neiphiu Rio elected unopposed before polls
  3. Northeast polls: It’s advantage BJP
  4. "Upcoming Elections in India". பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
  5. https://scroll.in/latest/866054/former-nagaland-chief-minister-kl-chishi-12-other-congress-leaders-join-bjp
  6. https://timesofindia.indiatimes.com/india/poll-boycott-no-solution-to-nagaland-issue-kiren-rijiju/articleshow/62708760.cms
  7. https://timesofindia.indiatimes.com/india/nagaland-assembly-polls-bjp-to-join-hands-with-ndpp/articleshow/62584623.cms
  8. http://www.firstpost.com/politics/had-we-gone-it-alone-wed-have-won-20-seats-nagaland-bjp-state-president-talks-seat-sharing-dissent-and-defections-4351023.html
  9. http://www.elections.in/tripura/
  10. Tripura election results: BJP-IPFT combine leads in 40 seats in 60-member state Assembly
  11. திரிபுரா: கம்யூனிஸ்ட் கோட்டையை கைப்பற்றுகிறது பாஜக
  12. "The list of all contesting candidates for 13th Nagaland Legislative Assembly Election". The Naga Republic. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
  13. நாகலாந்தில் நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு

வெளி இணைப்புகள்[தொகு]