உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தினி கோசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தினி கோசல்
நந்தினியின் நடன நிகழ்ச்சி மின்னசொட்டா பல்கலைக்கழகம்.
பிறப்புஇந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடனக் கலைஞர், நடிகை

நந்தினி கோசல் (Nandini Ghosal) ஒரு இந்திய வங்காள பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குநருமாவார். [1] 1997 ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமான சார் அத்யேயில் அறிமுகமான பிறகு, கிந்து சன்லப் கிச்சு பிரலப் (1999) மற்றும் ஸ்திதி (2003) போன்ற பல பெங்காலி படங்களில் நந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேலை[தொகு]

இவர் குரு கேளுச்சரண மகோபாத்திரா வழிகாட்டுதலின் கீழ் பாடம் எடுத்த பிறகு ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராக, குரு பூசாலி முகர்ஜியின் கீழ் ஒடிசியைக் கற்றுக்கொண்டார். [2]

இந்த நேரத்தில் குரு மகோபாத்ரா நடனமாடிய பல நடன-நாடகங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

எசுப்பானியா வலென்சியன் அரசாங்கத்தின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) நிதியுதவி வழங்கும் அமைப்பான உலக கலை மன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Jayamanne, Laleen (22 October 2014). The Epic Cinema of Kumar Shahani. Indiana University Press. p. 204. Archived from the original on 2 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் January 27, 2017. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  2. Reddy. The Making of Romantic Love: Longing and Sexuality in Europe, South Asia, and Japan, 900-1200 CE. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226706269.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nandini Ghosal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_கோசல்&oldid=3405284" இலிருந்து மீள்விக்கப்பட்டது