உள்ளடக்கத்துக்குச் செல்

நண்பேன்டா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நண்பேன்டா
இயக்கம்ஜகதீஷ்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைஜகதீஷ்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஉதயநிதி ஸ்டாலின்
நயன்தாரா
சந்தானம்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்ரெட் ஜெயன்ட் மூவீஸ்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2015 (2015-04-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நண்பேன்டா (Nannbenda) என்பது, ஜகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [1]இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்.

நடிப்பு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குநர் ஜகதீஷ் இயக்கும் நண்பேன்டா எனும் திரைப்படத்தைத் தாயாரித்து, சந்தானத்துடன் இணைந்து தானும் நடிக்கவிருப்பதாக 2013ம் ஆண்டு சூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்[2]. இப்படத்தின் நாயகியாக முதலில் காஜல் அகர்வாலை தேர்ந்தெடுத்தனர்[3]. அதற்காக அவருக்குக் குறிப்பிட்ட தொகையும் முன்பணமாக பெற்றுக் கொண்டார், காஜல். படத்திற்கு முறையான தேதிகள் வழங்கப்படாத நிலையில், வேறு சில தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்[4][5]. இரண்டு மாதங்கள் பொறுத்திருந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, பின்னர் படத்தின் நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார்[6]. மேலும் இப்படத்தில் தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது[7].

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பாளராகம், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டது. உதயநிதி, ஹாரிஸுடன் நடிகராக மூன்றாவது முறையும், தயாரிப்பாளராக ஐந்தாவது முறையாகவும் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை[தொகு]

நண்பேன்டா
வெளியீடு23 திசம்பர் 2014
ஒலிப்பதிவு2014
இசைப் பாணிமுழுநீளப் படத்தின் இசை
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி நிறுவனம்
இசைத் தயாரிப்பாளர்ஹாரிஸ் ஜயராஜ்
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை
'அனேகன்
(2015)
நண்பேன்டா

ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். சோனி நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டு திசம்பர் 23ம் நாள் படத்தின் இசை வெளியிடப்பட்டது[8]. இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் வெளிவந்த முதல் நாளே ஐடியுன்சில் (iTunes) முதலிடம் பிடித்தது[9].

# பாடல்பாடியவர்(கள்) நீளம்
1. "எனை மறுபடி மறுபடி"  விஜய் பிரகாஷ், மேகா 5.50
2. "ஊரெல்லாம் உன்னைக் கண்டு"  உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ 4:56
3. "நீ சன்னோ நியு மூனோ"  ரிச்சர்ட், ஆண்ட்ரியா ஜெரெமையா, மில்லி நாயர் 4.43
4. "நீராம்பல் பூவே"  அர்ஜுன் மேனன், மெக் விக்கி 2.57
5. "டப்பாங்குத்து மெட்டுல"  கானா பாலா, உஜ்ஜயினி ராய் 4.18
6. "தேனே தேனே செந்தேனே"  ஹரிசரன், பிரவீன் சாய்வி 3.40
மொத்த நீளம்:
24.64

சந்தைப்படுத்துதல்[தொகு]

இத்திரைப்படத்தின் முதல் சுவரொட்டி 2014 ஆண்டு சனவரி மாதம் வெளிவந்தது. திரைப்படத்தின் முன்னோட்டம், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது[10].

மேற்கோள்கள்[தொகு]

  1. Nicy V.P (6 January 2015). "Nannbenda Cast and release date announced". The International Business Times. Archived from the original on 14 June 2021. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
  2. "மீண்டும் 'நண்பேன்டா' சொல்லும் உதய் - நயன்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  3. "காஜலை கைப்பற்றிய உதயநிதி India". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  4. "சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  5. "நண்பேன்டா படத்தால் பெரும் இழப்பு: முன்பணத்தை திருப்பி தரமுடியாது: காஜல் அகர்வால் உறுதி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  6. "40 லட்சம் விவகாரம்! காஜல்அகர்வால்-உதயநிதி மோதல்!!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  7. "ஸ்ருதிஹாசனுக்கு தமன்னா கொடுத்த அதிர்ச்சி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.
  8. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/nannnbenda-tracklist.html
  9. https://twitter.com/Udhaystalin/status/549272858795339776/photo/1
  10. "நண்பேன்டா டீசருக்கு பாராட்டு...உற்சாகத்தில் உதயநிதி!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பேன்டா_(திரைப்படம்)&oldid=3995753" இலிருந்து மீள்விக்கப்பட்டது