தேனி - காமராசர் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமராசர் பேருந்து நிலையம் என்பது தேனி மாவட்டத் தலைநகரான தேனியில், தேனி - அல்லிநகரம் நகராட்சியால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த பழைய பேருந்து நிலையமாகும். தேனி நகரில் 2014 ஆம் ஆண்டில் தேனி - கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்ற புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட [1] [2]பின்பு, அனைத்து ஊர்களுக்குமான பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டதுடன், பழைய பேருந்து நிலையமான காமராசர் பேருந்து நிலையம் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டது.

அதன் பிறகு, தேனியிலிருந்து போடி மற்றும் கம்பம் வழியாகச் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டியிருந்ததால், பழைய பேருந்து நிலையமான காமராசர் பேருந்து நிலையம், பேருந்து முனையமாக மாற்றம் செய்யப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தேனியில் பென்னிகுயிக் பேருந்து நிலையம்: முதல்வர் ஜெயலலிதா திறந்தார்! (விகடன் செய்தி)
  2. "பென்னிகுயிக் பெயரில் தேனியில் புதிய பஸ் நிலையம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2014/Jan/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-819043.html. பார்த்த நாள்: 27 April 2024. 
  3. பேருந்து நிறுத்தமாகச் செயல்படத் தொடங்கியுள்ள தேனி பழைய பேருந்து நிலையம் (தினமணி செய்தி)