தெப்பத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடந்தை மகாமகக் குளத்தில் தெப்ப உற்சவம்

தெப்பத் திருவிழா (Theppotsavam) என்பது இந்து சமய கோயில்களின் குளங்களில் நிகழ்த்தப்படும் ஒரு திருவிழாவாகும்.[1] இத்திருவிழா நாளில் இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தினைச் சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கொரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். தெப்போற்சவம், தெப்ப உற்சவம், மிதவைத் திருவிழா என்ற வேறு பெயர்களாலும் இத்திருவிழா அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கோயில்களில் இந்து மத திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக, கோவில்களின் முக்கிய சிலை அலங்கரிக்கப்பட்டு, கோவில் குளம் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

சொல்லிலக்கணம்[தொகு]

தெப்பம் என்பது படகினைக் குறிக்கின்ற ஒரு சொல்லாகும்.[2]

தெப்பம் உருவாக்கம்[தொகு]

தெப்பத்தின் அடிப்பகுதியாக காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும், மரங்களையும் கட்டித் தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள் மற்றும் அலங்காரப் பொருள்களை இணைக்கின்றார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் தெப்பதிருவிழா நடைபெறுவதால் வண்ண மின் விளக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது. சித்திரத் தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து குளத்தில் வலம் வருகிறார்கள்.

நம்பிக்கை[தொகு]

பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவினின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத்தருவதே இவ்விழாவின் பின்னணியாகும்.

தெப்பத்திருவிழா கொண்டாடப்படும் சில கோவில்கள்
  1. திருப்பதி வெங்கடேசுவரா கோவில் [3]
  2. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்[4]
  3. சமயபுரம் மாரியம்மன் கோயி [5]
  4. சிம்மாச்சலம் வராக லட்சுமி நரசிம்மா் கோயில்[6]
  5. விஜயவாடா கனக துர்கை கோயில்[7]
  6. திருவாரூர் தியாகராஜர் கோயில் [8]
  7. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. தெப்பத் திருவிழா - தெப்பம்-அனிதா கார்த்திக்-தினமலர் தளம்
  2. https://ta.wiktionary.org/s/1y4b தமிழ் விக்சனரி
  3. "Float festival begins". The Hindu. 16 March 2003 இம் மூலத்தில் இருந்து 9 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109052558/http://www.hindu.com/2011/03/16/stories/2011031655680200.htm. 
  4. "Huge crowd witnesses float festival at ‘teppakulam' in Madurai". The Hindu. 21 January 2011 இம் மூலத்தில் இருந்து 25 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110125235440/http://www.hindu.com/2011/01/21/stories/2011012164610600.htm. 
  5. "Festivals". Samayapuram mariamman Temple.
  6. "'Teppotsavam' draws crowds". The Hindu.
  7. "Dussehra festivities end, but joy continues at Vijayawada KanakaDurga temple". Deccan Chronicle (Vijayawada). 5 October 2014. http://www.deccanchronicle.com/141005/nation-current-affairs/article/dussehra-festivities-end-joy-continues-vijayawada-kanakadurga. பார்த்த நாள்: 21 September 2015. 
  8. "திருவாரூர்: மே 25 -ம் தேதி தெப்பத் திருவிழா; ஏற்பாடுகள் தீவிரம்!". விகடன். https://www.vikatan.com/spiritual/gods/theppam-festival-is-going-to-be-held-at-tiruvarur. பார்த்த நாள்: 11 May 2024. 
  9. "தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் களைகட்டிய தெப்பத் திருவிழா". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/mylapore-kapaleeswarar-temple-boat-festival-on-the-occasion-of-thaipusam-895030. பார்த்த நாள்: 11 May 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பத்_திருவிழா&oldid=3953170" இலிருந்து மீள்விக்கப்பட்டது