உள்ளடக்கத்துக்குச் செல்

தூண்டப்பட்ட உட்கோட்டுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூண்டப்பட்ட உட்கோட்டுரு (induced subgraph) என்பது ஒரு கோட்டுவின் உட்கோட்டுரு ஆகும். மூலக் கோட்டுருவின் கணுக்களின் உட்கணம் ஒன்றிலுள்ள கணுக்களாலும் அவற்றின் இருமங்களை இணைக்கும் விளிம்புகளாலுமான உட்கோட்டுருவாக இது அமையும்.

வரையறை[தொகு]

G = (V, E) என்பது ஒரு கோட்டுரு; இதன் கணுக்களின் உட்கணம் S, SV எனில்:

தூண்டப்பட்ட உட்கோட்டுரு G[S] வின் கணுக்களும் விளிம்புகளும் பின்வருவனவாக இருக்கும்:

  • கணுக்கள்: S
  • விளிம்புகள்: கோட்டுரு G இன் விளிம்புகணமான (E) இல் உள்ள விளிம்புகளில், முனைகளை S இல் கொண்ட விளிம்புகள்[1]

திசையிலாக் கோட்டுருக்களுக்கும் திசை கோட்டுருக்களுக்கும், பல்கோட்டுருகளுக்கும் இந்த வரையறை பொருந்தும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Diestel, Reinhard (2006), Graph Theory, Graduate texts in mathematics, vol. 173, Springer-Verlag, pp. 3–4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540261834.