துளசிதாஸ் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசிதாஸ் மேத்தா
படிமம்:Tulsidas Mehta.jpg
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்[1]
பதவியில்
1962–1967
தொகுதிஜந்தாஹா சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில்
1969–1972
தொகுதிஜந்தாஹா
பதவியில்
1985–1990
தொகுதிஜந்தாஹா
பதவியில்
1990–1995
தொகுதிஜந்தாஹா
பதவியில்
1995–2000
தொகுதிஜந்தாஹா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனதா தளம்
சம்யுக்தா சோசலிச கட்சி
லோக்தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

துளசிதாஸ் மேத்தா (Tulsidas Mehta) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டப் பேரவையில் ஜந்தாஹா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். 1990 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளராக வெற்றி பெற்றார். மேத்தா ஒரு சோசலிச அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் மற்றொரு பீகார் அரசியல்வாதியும் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான அலோக் குமார் மேத்தாவின் தந்தையாவார்.[2] இராச்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். [3] மேத்தா ஜந்தாஹா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, 1962,1969,1985,1990 மற்றும் 1995 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

துளசிதாஸ் மேத்தா ஒரு சமூகவுடைமை அரசியல்வாதி. இவர் ஆரம்பத்தில் சோசலிச கட்சியுடன் இணைந்தார். கட்சி சார்பில் இவர் 1962 இல் தனது முதல் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1969 ஆம் ஆண்டில், மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இவர் பீகார் அரசில் மாநில அமைச்சரானார். [4] 1969, 1985, 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் மேத்தா வெற்றி பெற்றார்; 1970 ஆம் ஆண்டு கர்ப்பூரி தாக்கூரின் அமைச்சரவையில் முதன்முறையாக பீகார் அரசாங்கத்தில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் அமைச்சரவையில் இரண்டு முறை மாநில அமைச்சராகவும் மேத்தா பணியாற்றினார்.[5] மேத்தா சோசலிச தலைவர் அக்சயவத் ராயின் கூட்டாளி ஆவார். அவர் 1962 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேத்தாவைத் தூண்டினார். தேர்தல் செலவுகள் செய்யத் தயங்கியபோது இந்திய தேசிய காங்கிரசு தலைவர் தீப் நாராயண் சிங்கால் ஆதரிக்கப்பட்டு பீகார் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவராக இருந்த அவரது அரசியல் எதிரியான ராஜ்வன்ஷி சிங்கை மேத்தா தோற்கடிக்க முடிந்தது.[6]

இவரது மகன், அலோக் குமார் மேத்தா இராச்டிரிய ஜனதா தளத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் கருதப்படுகிறார். கட்சியில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். மேத்தா குடும்பம் சமஸ்திபூர் மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதி அரசியலில் கணிசமான செல்வாக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. [7]

பிற பங்களிப்புகள்[தொகு]

மேத்தா கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்ததற்காகவும் அறியப்பட்டவர். பீகார் மாநிலத்தில் வைசாலி கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு குளிர்பதனக் கிடங்கின் நிறுவனரும் ஆவார். [8]

இறப்பு[தொகு]

துளசிதாஸ் மேத்தா 2019 இல் தனது 93 வயதில் இறந்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India Results". ECI. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  2. "नहीं रहे तुलसी दास मेहता, नीतीश-राबड़ी ने जताया दुख, राजद ने कार्यालय का झुकाया झंडा". Dainik Jagran. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  3. "तुलसी दास मेहता को शोक सभा में दी गई श्रद्धांजलि". Dainik Bhaskar. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  4. "Tulsidas Mehta died at the age of 93". patrika (in Hindi). Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Former minister Tulsidas Mehta passes away". Punjab Kesari. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  6. "Shivanand Tiwari tells untold story of Tulsidas Mehta". NDTV. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  7. "Lalu scions Speedy climb up the RJD ladder ruffles many feathers in Bihar". Economic Times. Archived from the original on 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  8. "Anniversary of Tulsidas Mehta and Ram Vilas Paswan celebrated". Dainik Bhaskar. Archived from the original on 16 September 2021. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
  9. "Ex Minister Tulsidas Mehta last ritual". Dainik Jagran. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிதாஸ்_மேத்தா&oldid=3935457" இலிருந்து மீள்விக்கப்பட்டது