உள்ளடக்கத்துக்குச் செல்

துருகியோவின் வரலாற்று மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருகியோவின் வரலாற்று மையம்
துருகியோவின் வரலாற்று மையம்-இன் கொடி
கொடி
துருகியோவின் வரலாற்று மையம்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): நீடித்த இளவேனில் நிகழ் தலைநகரம், பெருவின் பண்பாட்டுத் தலைநகரம், மரினேராத் தலைநகரம், தகுதிசார் நகரமும் தாய்நாட்டிற்கு விசுவாசமிக்கதும், பெருவின் பாசோ குதிரையின் பிறப்பிடம், விடுதலையின் தொட்டில், பெருவின் நீதித்துறை பிறப்பிடம்[1]
நாடு பெரு
மண்டலம்லா லிபர்டாடு
மாகாணம்துருகியோ
எசுப்பானிய நிறுவல்நவம்பர், 1534இல் டியேகோ டெ அல்மாக்ரோவால் நிறுவப்பட்டது[2]
அரசு
 • வகைமேயர்-நகரமன்றம்
 • மேயர்சீசர் அகுனா பெரால்டா
ஏற்றம்
34 m (112 ft)
இனம்Trujillano/a
நேர வலயம்ஒசநே-5 (PET)
சிப் குறியீடுகள்
13001
Area code044
புரவல் புனிதர்கள்சான் வாலென்டின்
லா போர்த்தோவின் கன்னி
அண்மைய மாவட்டங்கள்[3]
  • லா எசுபெரான்சா
  • துருகியோ
  • விக்டர் லார்கோ
  • மோச்சே
  • யுவான்சாக்கோ
  • எல் போர்வெனிர்
  • பிளொரென்சா டெ மோரா
  • சாலவெர்ரி
  • லாரேதோ
இணையதளம்www.munitrujillo.gob.pe

துருகியோவின் வரலாற்று மையம் பெருவின் லா லிபர்டாடு மண்டலத்தில் அமைந்துள்ள துருகியோ நகரத்தின் முதன்மையான நகரியப் பகுதியும் வளர்ச்சி மையமும் ஆகும். எசுபானா நிழற்சாலை சூழ்ந்து நீள்வட்ட வடிவத்தில் உள்ள இந்நகரப் பகுதி துருகியோ சுவரை ஒட்டி கட்டமைக்கப்பட்டது. இது துருகியோ நகராட்சியின் தலைமையிடமாக விளங்குகின்றது. இந்த வரலாற்று மையத்தின் நடுவில் துருகியோவின் பிளாசா டெ அர்மாசு அமைந்துள்ளது; இந்த இடத்தில்தான் 1534இல் எசுப்பானியர்கள் முதலில் குடியேற்றத்தை நிறுவினர்; தவிரவும் திசம்பர் 29, 1820இல் துருகியோவின் விடுதலை சாற்றுரையும் இங்குதான் அறிவிக்கப்பட்டது.

துருகியோவின் வரலாற்று மையத்தில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன; இதனை ஏப்ரல் 23, 1971இல் நினைவுச்சின்ன நகரம் என்றும் 1972, திசம்பர் 26இல் நினைவுச்சின்னப் பகுதி என்றும் நகராட்சி தீர்மானம் இயற்றப்பட்டது. இது வரலாற்று மையமாகத் திகழும் அதேவேளையில் செயற்பாட்டிலுள்ள நகரமாகவும் விளங்குகின்றது. துருகியோ பெருநகரப் பகுதியின் அங்கமாக வளர்ந்து வருகின்றது. இந்த வரலாற்றுப் பகுதியின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் துருகியோ மாகாண நகராட்சி மேற்பார்வையிடுகின்றது.

துருகியோவின் வரலாற்று மையம் கிட்டத்தட்ட 133.5எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. 72 வளாகங்களாக தொகுக்கப்பட்டுள்ள மொத்தம் 1,783 இடங்களும் முன்பு "துருகியோ சுற்றடைப்பு" எனப்பட்டுது; இது நகரச் சுவரால் சூழப்பட்டிருக்கிறது.

2005ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி துருகியோவின் வரலாற்று மையத்தில் 12,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "History of Judiciary in Perú". Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |año= (help)
  2. Newspaper La Industria (ed.). (Spanish)Napoleón Cieza Burga:Fundación de Trujillo no fue el 5 de marzo. Archived from the original on மார்ச் 8, 2012. பார்க்கப்பட்ட நாள் April 27, 2012. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  3. "Trujillo Metropolitan districts" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24.

வெளி இணைப்புகள்[தொகு]

பல்லூடகம்[தொகு]