உள்ளடக்கத்துக்குச் செல்

தினமலர் வாரமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினமலர் வாரமலர்
தினமலர் வாரமலர்
தினமலர் வாரமலர்
முக்கிய எழுத்தாளர்கள்அந்துமணி, எலிசா, சின்ன பொண்ணு, சினிமா பொன்னையா, சகுந்தலா கோபிநாத், நடுத்தெரு நாராயணன்
வகைவார இதழ் பல்சுவை
வெளியீட்டாளர்தினமலர்
நிறுவனம்தினமலர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.dinamalar.com/

தினமலர் வாரமலர் இதழ் தினமலர் நாளிதழின் ஞாயிற்றுக் கிழமையில் இலவச இணைப்பாக வழங்கப்படும் ஒரு இதழாகும்.

வாரமலர் பகுதிகள்[தொகு]

  • பக்தி கட்டுரை - ஆன்மீக சம்மந்தமான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
  • தமாசு - வாசகர்களின் நகைச்சுவை துணுக்குகள் பிரசுரமாகும் பகுதி.
  • இது உங்கள் இடம் - வாசகர்களின் அனுபவங்களும், அறிவுரைகளும் பிரசுரமாகும் பகுதி.
  • அர்ச்சனை - வாசகர்கள் எழுதிய கடிதங்கள்
  • பா.கே.ப - அந்துமணி பார்த்தது, கேட்டது, படித்தது என்ற பகுதியில் அந்துமணி பார்த்த, படித்த, கேட்ட தகவல்கள்
  • அந்துமணி பதில்கள் - வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணி என்ற புனைப்பெயரில் பதில்கள் அளிக்கப்படுகின்றன.
  • சினிமா செய்திகள் - துணுக்கு மூட்டை, இதப்படிங்க முதல்ல, அவ்வளோதான் போன்றவை திரைப்படம் சம்மந்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற பகுதியாகும்.
  • அன்புடன் அந்தரங்கம் - வாசகர்களின் கடிதங்களுக்கு ஆலோசனை கூறும் பகுதி.
  • திண்ணை - பிரபலங்கள், தலைவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், சுவையான குறிப்புகளையும் நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து தருகின்ற பகுதி. நடுத்தெரு நாராயணன் என்ற புனைப்பெயரில் இந்த பக்கம் தொகுக்கப்படுகிறது.
  • பிற பகுதிகள் - குறுக்கெழுத்துப் போட்டி, கவிதை சோலை, சிறுகதை, ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன, பரிசு கதை

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி[தொகு]

தினமலர் நிறுவுனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக தினமலர் வாரமலர் வார இதழில் வருடம் தோறும் நடத்தப்படும் சிறுகதை போட்டியாகும். இந்தப் போட்டியில் வாசகர்களின் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமலர்_வாரமலர்&oldid=1891787" இலிருந்து மீள்விக்கப்பட்டது