தாமிரம்(II) சயனூரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) சயனூரேட்டு Copper(II) Cyanurate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம் 6-ஐதராக்சி-1,3,5-டிரையசீன்-2,4-பிசு(ஒலேட்டு)
வேறு பெயர்கள்
தாமிரம் 1,3,5-டிரையசீன்-2,4,6-டிரையால்
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 137177301
  • [Cu+2].[O-]c1nc(O)nc([O-])n1
பண்புகள்
C3HCuN3O3
வாய்ப்பாட்டு எடை 190.60434
தோற்றம் ஊதாநிறத் தூள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாமிரம்(II) சயனூரேட்டு (Copper(II) cyanurate) C3HCuN3O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் குறைந்த அளவு பயன்பாடுகளையே கொண்டுள்ளது. தாமிரம்(II) சயனுரேட்டு திட்டமிட்டு தயாரிக்கப்படுவதைக் காட்டிலும் தற்செயலாகவே பெரும்பாலும் உருவாகிறது.

வெளிப்புற நீச்சல் குளத்தில் தாமிரத்தின் செறிவு அதிகமாக இருக்கும்போது அங்கு தாமிரம்(II) சயனூரேட்டு பெரும்பாலும் காணப்படுகிறது. குளோரின் நிலைப்படுத்தியாக சேர்க்கப்படும் சயனூரிக் அமிலத்துடன் இது வினைபுரிந்து தாமிர சயனூரேட்டை உருவாக்குகிறது. இச்செய்முறை ஊதா சயனூரேட்டு நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்நிகழ்வுக்குப் பின்னர் மேற்பரப்புகளும் குளத்தின் நீரும் ஊதா நிற நிழலுக்கு மாற்றிவிடும். [1]

உருகிய யூரியாவுடன் நைட்ரேட்டு அல்லது கார்பனேட்டு போன்ற தாமிர சேர்மங்களை 190 செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் மூலம் பெரும்பாலும் லாவெண்டர் வண்ண யோவானியூமைட்டு சேர்மம் உருவாக்கப்படுகிறது. [2] பின்னர் இது ஒரு சூடான வலிமையான அமோனியா கரைசலில் கரைக்கப்பட்டு சேர்மம் மீள்படிகமாக்கப்படுகிறது. வலிமையான அமோனியா கரைசலுக்குப் பதிலாக பலவீனமான (2%) குளிர் அம்மோனியா கரைசல் பயன்படுத்தப்பட்டால் அடர் ஊதா சேர்மம் CuC3N3O3H • 2NH3 உருவாகிறது.

அமோனியா ஈந்தணைவிகளற்ற பச்சை நிறங்கொண்ட தாமிர சயனூரேட்டும் (Cu3(C3N3O3)2) அறியப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Purple Staining, Purple Cyanurate, Copper Cyanurate, PoolMoldSolutions.com". PoolMoldSolutions.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  2. 2.0 2.1 Taylor, R. M. (May 1972). "Metal cyanurate compounds formed directly from metal salts and urea". Zeitschrift für anorganische und allgemeine Chemie 390 (1): 85–96. doi:10.1002/zaac.19723900112. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_சயனூரேட்டு&oldid=3557696" இலிருந்து மீள்விக்கப்பட்டது