தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் என்பது தமிழ்த் திரைப்படத்துறையில் வெளியான திரைப்படங்கள் செய்த சாதனைகளை குறிக்கின்றது.

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்[தொகு]

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் என்ற படம் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த முதல் தமிழில் பேசும் திரைப்படமாகும்.[1].

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்[தொகு]

1944 ஆம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் என்ற படம் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது.[2][3][4][5][6][7] தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.

ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்[தொகு]

பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[8]

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்[தொகு]

1937 ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட 'நவயுவன்' என்ற படம் முதன் முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்[தொகு]

கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜி. ராமநாதன் பெற்றனர்.

அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்[தொகு]

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.

தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்[தொகு]

1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.[9]

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்[தொகு]

1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த ஹரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.

சர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்[தொகு]

2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கோகுல்சிங், கே. (2004). Indian popular cinema: a narrative of cultural change. Trentham Books. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1858563291. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. "Blast From the Past - Haridas 1944, The Hindu 11 July 2008". Archived from the original on 14 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0333934105, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780333934104. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 46. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. Limca book of records. Bisleri Beverages Ltd. 1996. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  6. Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 33:2. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: unrecognized language (link)
  7. "Filmography of M. K. Thyagaraja Bhagavathar Page 1". Archived from the original on 2002-03-07. பார்க்கப்பட்ட நாள் 2008-05-17.
  8. "Latest News about Rajnikanth". Reocities.com. Archived from the original on 2012-10-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  9. "Rajinikanth's 10 Biggest FLOPS". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.