டெம்பிளர் பூங்கா

ஆள்கூறுகள்: 3°17′11″N 101°38′32″W / 3.2863296°N 101.6423534°W / 3.2863296; -101.6423534
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெம்பிளர் பூங்கா
Templer Park
Hutan Lipur Templer
டெம்பிளர் பூங்கா
டெம்பிளர் பூங்கா
சிலாங்கூர் மாநிலத்தில் டெம்பிளர் பூங்கா
வகைஇயற்கை பூங்கா
அமைவிடம்ரவாங், கோம்பாக் மாவட்டம்,
சிலாங்கூர்,  மலேசியா
ஆள்கூறு3°17′11″N 101°38′32″W / 3.2863296°N 101.6423534°W / 3.2863296; -101.6423534
பரப்பு1,214 எக்டர்
உருவாக்கப்பட்டது8 செப்டம்பர் 1954

டெம்பிளர் பூங்கா (மலாய்: Hutan Lipur Templer; ஆங்கிலம்: Templer Park; சீனம்: 寺庙公园) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம், ரவாங் பகுதியில்; கோலாலம்பூருக்கு வடக்கே பழைய கோலாலம்பூர்-ரவாங் சாலையில்; பத்து மலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு வனக் காப்பகம் ஆகும். தற்போது டெம்பிளர் வன சுற்றுச்சூழல் பூங்கா (Templer Forest Eco Park) என்று அழைக்கப்படுகிறது.[1]

1,214 எக்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதிக்கு, 1952 - 1954-ஆம் ஆண்டுகளில் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் பதவி வகித்த பிரித்தானிய இராணுவ அதிகாரி சர் ஜெரால்ட் டெம்பிளரின் பெயர் சூட்டப்பட்டது.[2][3]

செப்டம்பர் 8, 1954 அன்று, டெம்பிளர் பூங்காவை வனவிலங்குகளுக்கான புகலிடமாகவும், பறவைகளுக்கான சரணாலயமாகவும், இயற்கையின் அழகை நேசிக்கும் அனைவரும் சந்திக்கும் இடமாகவும் சிலாங்கூர் மாநிலத்தால் அர்ப்பணிக்கப்படுகிறது என்று மறைந்த சிலாங்கூர் சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா அறிவித்தார்.[4]

1955-ஆம் ஆண்டில், டெம்பிளர் பூங்கா ஒரு தாவரவியல் பூங்கா என மலேசிய நிலச் சட்டத்தின் (Notification 104-1955) கீழ் மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

பொது[தொகு]

டெம்பிளர் பூங்காவில் ஓர் அருவி
டெம்பிளர் பூங்காவின் பெரும்அருவி

இந்த வனக் காப்பகத்தில் பல அடுக்கு நீர்வீழ்ச்சிகள், காட்டு ஓடைகள் மற்றும் மலைக்காட்டுப் பாதைகள் உள்ளன. மகிழுலா நிலப்பகுதிகள், மீன்பிடி இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொது கழிப்பறைகள் மற்றும் சிறுகடைகள் போன்ற பல வசதிகள் உள்ளன.

டெம்பிளர் பூங்காவில் பல வகையான பறவைகளும் வனவிலங்குகளும் காணப்படுகின்றன.[5]

பறவைகள்[தொகு]

ஊர்வன/வனவிலங்குகள்[தொகு]

மலேசிய இயற்கை கழகத்தின் ஆய்வுகளின்படி, மலேசிய செரோ ஆடுகள் இங்கு அதிகமாக உள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அனாக் டகுன் என்ற குகையில், லிபிசுடியஸ் பாட்யூன்சிஸ் (Liphistius batuensis) என்ற அரிய வகை சிலந்திகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.[6]

அச்சுறுத்தல்கள்[தொகு]

அண்மைய காலங்களில், டெம்ப்ளர் பூங்காவிற்கு அருகிலுள்ள இடங்களில் மனைக் கட்டுமானங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் இந்தப் பூங்கா, வீட்டுவசதி மற்றும் சாலை மேம்பாடுகளின் மூலமாக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.[7][8]

டெம்பிளர் பூங்காவை ஒட்டிய நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. அங்கு 17-அடுக்கு உயர்நிலை குடியிருப்புகள்; மற்றும் குழிப்பந்தாட்டத் திடல்கள் கட்டப்பட்டன. கூடுதலாக, தற்போது சுமார் 50 எக்டேர் பரப்பளவு காட்டு நிலங்கள் சாலை விரிவாக்கங்களுக்கும் மற்றும் குடியிருப்புகளுக்கும் ஒக்கப்பட்டுள்ளன.[9]

வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் சாலை மேம்பாடுகள் போன்றவற்றினால் டெம்ப்ளர் பூங்காவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன.[10]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Templer Forest Eco Park is located in Templar Forest Reserve, a part of the State Forest Park which is situated 13 km from Rawang via Jalan Selayang – Rawang and 21 km from Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  2. "Templer Forest Eco Park is located in Templar Forest Reserve, a part of the State Forest Park which is situated 13 km from Rawang via Jalan Selayang – Rawang and 21 km from Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 26 April 2024.
  3. Gombak, Filed under (5 October 2020). "Templer's Park (Taman Rimba Templer)". Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 26 April 2024.
  4. Gombak, Filed under (5 October 2020). "Templer's Park (Taman Rimba Templer) - Named after Sir Gerard Templer, the British High Commissioner who was instrumental in Templer's Park establishment". Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  5. "Bird List - Templer Park, Selangor, Malaysia - eBird Hotspot". ebird.org. 10 December 1989. பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  6. T.W. Lim and S.S. Yussof (2009). "Conservation status of Batu Caves Trapdoor Spider (Liphistius batuensis Abraham (Araneae, Mesothelae)): A preliminary survey. 61: 121-132.". Malayan Nature Journal 62 (1): 121–132. https://www.academia.edu/39055136. 
  7. "Rampant logging and development endangering rare wildlife and trees" (PDF). பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  8. FOO, NICHOLAS CHENG and NOEL. "Templer Park under threat". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  9. "Risk of permanent habitat loss - New Straits Times". NST Online (in ஆங்கிலம்). 18 March 2021. பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.
  10. Mun, Wong Koon (20 November 2012). "The Selayang Municipal Council which has jurisdiction over the housing project in Templer's Park should heed the alarm sounded by Malaysian Nature Society". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 27 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெம்பிளர்_பூங்கா&oldid=3941320" இலிருந்து மீள்விக்கப்பட்டது