உள்ளடக்கத்துக்குச் செல்

டிரையெத்திலிண்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரையெத்திலிண்டியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரையெத்திலிண்டியம்
வேறு பெயர்கள்
இண்டியம் டிரையெத்தில், டிரையெத்திலிண்டிகேன், இண்டியம்டிரையெத்தில்
இனங்காட்டிகள்
923-34-2
ChemSpider 92075
InChI
  • InChI=1S/3C2H5.In/c3*1-2;/h3*1H2,2H3;
    Key: OTRPZROOJRIMKW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101912
  • CC[In](CC)CC
பண்புகள்
C6H15In
வாய்ப்பாட்டு எடை 202.00 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 144 °C (291 °F; 417 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H250, H314
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிரையெத்திலிண்டியம் (Triethylindium) என்பது C6H15In [1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கரிம உலோகச் சேர்மங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

இண்டியம்(III) குளோரைடின் ஈதர் கரைசலை எத்தில் மக்னீசியம் குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இண்டியம் டிரையெத்தில் தயாரிக்கலாம்.

InCl3 + 3C2H5MgCl → In(C2H5)3 + 3MgCl2

இதைப்போல வேறு தொகுப்பு முறைகளும் உள்ளன [3].

பண்புகள்[தொகு]

இண்டியம் டிரையெத்தில் நிறமற்று, நஞ்சுத் தன்மையுடன் காணப்படும் ஒரு நீர்மமாகும். இந்நீர்மம் எளிதாக ஆக்சிசனேற்றம் மற்றும் நீராற்பகுப்புக்கு உட்படும். வாயு நிலையிலும் கரைந்த நிலையிலும் இதுவோர் ஒற்றைப்படியாகக் காணப்படுகிறது. ஆலோமீத்தேன்களுடன் இண்டியம் டிரையெத்தில் வினைபுரிந்து டையெத்தில் இண்டியம் ஆலைடு உருவாகிறது [4]. மேலும் இது தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது.

In(C2H5)3 + H2O → In(C2H5)2OH + C2H6↑

பயன்கள்[தொகு]

குறைகடத்திகளுக்கான இண்டியம் பாசுபைடு மெல்லேடுகளைத் தயாரிக்க இண்டியம் டிரையெத்தில் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "INDIUM TRIETHYL". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  2. "Substance Name: Indium, triethyl". chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  3. Cowley, Alan H. (2009). Inorganic Syntheses. John Wiley & Sons. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-13297-3. {{cite book}}: |access-date= requires |url= (help)
  4. Maeda, Takayoshi; Tada,, Hisashi; Yasuda,, Kiyoshi; Okawara, Rokuro (11 September 1970). "Reactions of triethylindium with halomethanes: preparations and properties of diethylindium halides". Journal of Organometallic Chemistry 27 (1): 13-18. doi:10.1016/S0022-328X(00)82987-3. http://www.sciencedirect.com/science/article/pii/S0022328X00829873?via%3Dihub. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரையெத்திலிண்டியம்&oldid=2380027" இலிருந்து மீள்விக்கப்பட்டது