ஜெகத் காஸ்பர் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகத் காஸ்பர் ராஜ்

பிறப்பு 22 சனவரி 1966 (1966-01-22) (அகவை 58)
காஞ்சாம்புறம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
வதிவுசென்னை
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியா
இனம்தமிழர்
அறியப்பட்டதுதமிழ் மைய்யம், சென்னை சங்கமம், தமிழர் தொழில் வர்த்தக விவசாயப் பெருமன்றம் -CTACIS
மதம்கிறிஸ்தவம்

ஜெகத் காஸ்பர் ராஜ் (Rev.Fr.Jegath Gaspar Raj) என்பவா் சென்னையை சார்ந்த கத்தோலிக்க பாதிரியார். தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், சென்னை சங்கமம் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். 1995-2001 இல் வானொலி வெரிட்டசின் தமிழ் சேவையின் இயக்குனராக பணியாற்றினார். அவர் ஐடியா-ஜெய்பிரைட்டி சென்னை சர்வதேச மராத்தான் அமைப்பாளராகவும் இருக்கிறார். இவர் நாளா் பிரசுரங்களின் நிறுவனராகவும், ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 2009 ல், ஈழப் போர் IV இன் இறுதி கட்டங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு தூதராக செயல்பட்டார்..[1][2][3]

இவர் தமிழை தாய் மொழியாக கொண்ட வணிக நபர்களுக்கு ஒரு தமிழ் நிறுவனத்தையும் நிறுவினார். இது தமிழர் தொழில் வர்த்தக விவசாயப் பெருமன்றம் என்று அழைக்கப்படுகிறது. [4] அனைத்து உறுப்பினர்களும் ஒரு வாரம் ஒரு முறை சந்திக்கிறார்கள், அவர்களது சொந்த வணிகங்களை விவாதிக்கவும் மேம்படுத்தவும். 

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்_காஸ்பர்_ராஜ்&oldid=3668400" இலிருந்து மீள்விக்கப்பட்டது