ஜம்புவுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்புவுலு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து

ஜம்புவுலு (Jambavulu) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். இச்சமூகத்தினர் தங்களை ஆதி ஜம்புவுலு என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள் தற்போது விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர்.இச்சமூகத்தினர் மாதிகா இனத்தவர்களை ஒத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.[1][2][3]


மேற்கோள்கள்[தொகு]

  1. K. S. Singh, ed. (1998). People of India: India's communities, Volume 5. Oxford University Press. p. 1348. {{cite book}}: no-break space character in |title= at position 17 (help)
  2. Ajay Gudavarthy, ed. (2013). Politics of Post-Civil Society: Contemporary History of Political Movements in India. SAGE Publications India.
  3. Nagendra Kr Singh, ed. (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Publishing House. p. 490.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்புவுலு&oldid=3033229" இலிருந்து மீள்விக்கப்பட்டது