சோடியம் ஈரசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் ஈரசிட்டேட்டு

சோடியம் ஈரசிட்டேட்டு
Sodium diacetate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் ஐதரசன் அசிட்டேட்டு; சோடிய அமில அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
126-96-5 Y
ChemSpider 29100
யேமல் -3D படிமங்கள் Image
  • CC(O)=O.CC([O-])=O.[Na+]
பண்புகள்
C4H7NaO4
வாய்ப்பாட்டு எடை 142.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் ஈரசிட்டேட்டு (Sodium diacetate) என்பது NaH(C2H3O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலத்தினுடைய உப்பு ஆகும். பதப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரி எதிரியாக சோடியம் ஈரசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

அசிட்டிக் அமிலத்தை அரை நடுநிலைப்படுத்தலைத் தொடர்ந்து கரைசலை ஆவியாக்குதல் மூலம் இவ்வுப்பு உருவாகிறது. ஓரினயிணைவியாதல் காரணமாக அடர்த்தியான ஒரு கரைசலில் அசிட்டிக் அமிலத்தின் அமிலத்தன்மை அதிகமாதலின் விளைவாக சோடியம் ஈரசிட்டேட்டு உப்பு தோன்றுவதாகக் கருதப்படுகிறது.

2 CH3CO2H + NaOH → Na+[(CH3CO2)2H] + H2O

அமைப்பு[தொகு]

அசிட்டிக் அமிலத்தின் சோடிய அமிலவுப்பு என்றும் ஐதரசன் பிணைப்புடன் கூடிய எதிர்மின் அயனி (CH3CO2)2H. இன் சோடியம் உப்பு என்றும் இது விவரிக்கப்படுகிறது. இரண்டு ஆக்சிசன் (O-O) அணுக்களுக்கு இடையேயான இடைவெளி 2.47 Å [1] ஆகவும் இருக்கிறது. இவ்வுப்பு கணிசமான அளவில் காணப்படவில்லை என்றாலும் நிலைப்புத்தன்மை கொண்ட படிகங்களாக உருவாகிறது.

பயன்கள்[தொகு]

ஒரு உணவுக் கூட்டுப்பொருளாக[2] உப்பாகவும் புளிப்புக்காடியின் சுவை மணமும் இவ்வுப்பு பங்களிக்கும் பயன்களாகும். உணவுக் குறியீட்டு எண் E262 என ஐரோப்பிய ஒன்றியம் இவ்வுப்பை அடையாளப்படுத்துகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Barrow, Michael J.; Currie, Murdoch; Muir, Kenneth W.; Speakman, J. Clare; White, David N, J. "Crystal structures of some acid salts of monobasic acids. XVII. Structure of sodium hydrogen diacetate, redetermined by neutron diffraction" Journal of the Chemical Society, Perkin Transactions 2: Physical Organic Chemistry 1975, pp. 15-18. எஆசு:10.1039/P29750000015
  2. Peter J. Taormina "Implications of Salt and Sodium Reduction on Microbial Food Safety" in Critical Reviews in Food Science and Nutrition, 2010, vol. 50, 209-227. எஆசு:10.1080/10408391003626207

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஈரசிட்டேட்டு&oldid=3946923" இலிருந்து மீள்விக்கப்பட்டது