சேமிப்பின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேமிப்பின்மை என்பது எதிர்மறை சேமிப்பு. வருமானத்தை மீறிய செலவுகளை எதிர்மறை சேமிப்பு எனலாம். மேற்குறிப்பிட்ட, அதிகப்படியான செலவினங்கள் சேமிப்புகளில் இருந்தோ அல்லது கடன் மூலமாகவோ பெறப்படுகிறது. 1930 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில், ஒருவரது சராசரி வருமானத்திற்கும் அதிகமான செலவினங்களை, நிதி பற்றாக்குறை அல்லது எதிர்மறை சேமிப்பு என வரையறுக்கப்பட்டது.

ஆண்டோ (ANDO) மற்றும் மோடிங்கலனி (MODIGLIANI) போன்ற பொருளாதார வல்லுனர்கள், வாழ்க்கை சுழற்சியில் – சேமிப்பு என்ற கருதுகோளின்படி இளமையில் அதிகமாக சேமிப்பதாகவும், முதுமைக் காலங்களில் மனிதன் சேமிக்க இயலாதவனாக மாறிவிடுகின்றனர்[1]

ஷ்யஷி (HAYASHI) ஆண்டோ (ANDO) மற்றும் பெரிஸ் (FERRIS) ஆகியோர் ஆய்வின்படி, பொதுவாக அமெரிக்கர்கள், முதுமையில் அதிகமாக சேமிப்பதில்லை எனவும், ஒரு சிலர் சேமிப்பினும் அந்த தொகையானது அவர்களின் இளமைகால வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கினை விட குறைவு என அறியப்பட்டது.[2]

மேற்கண்ட தகவல்களுக்கு / ஆய்வுகளுக்கு மாறாக, ஜப்பானிய மக்கள் தங்கள் முதுமையிலும் மற்றவர்களை போல அதிகமாக சேமிக்கின்றனர். குடும்பத்துடன் அமைதியான வழியில்/ முறையில் வசிக்கின்றனர். ஜப்பானியர்கள் தங்களின் 80 வயதுக்கு மேலும் சேமிக்கும் பழக்கத்தை மறுகட்டமைத்து கொண்டு மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்வதை “ஹரிகோ” (Horiko) என்பவரின் ஆய்வு முடிவுகள் ஆதாரங்களோடு ”ஜப்பானில் வாழ்க்கை சுழற்சி தூண்டல்கள்” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமிப்பின்மை&oldid=3610428" இலிருந்து மீள்விக்கப்பட்டது