சுவடி (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவடி நிறுவகம்
நிறுவனர்கள்மரு. நடராஜா பிரபு, மரு. கணேசமூர்த்தி சிறீபவன்
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
நிறுவப்பட்டது19 சூலை 2010
தலைமையகம்யாழ்ப்பாணம், இலங்கை
சேவை புரியும் பகுதிபொதுச்சுகநலம்; கல்வி மேம்பாடு
Focusஅறிவார்ந்த சமூகத்தினைக் கட்டியெழுப்புதல்
தன்னார்வலர்10
பணியாளர்4
இணையத்தளம்http://www.suvadi.net/

சுவடி என்பது இலங்கையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் தலைமைப் பணிமனையைக் கொண்டியங்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். அறிவார்ந்த சமூகத்தினைக் கட்டியெழுப்புவதனை முதன்மை இலக்காகக் கொண்டு இவ்வமைப்பு 2010 சூலை 19 இல் நிறுவப்பட்டது. பொதுச்சுகநலத்துறை மேம்பாடு, இளையோர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல், காலநிலை மாற்றத்தினைத் தணித்தலும் எதிர்கொள்ளத்தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதலும் எனப் பல்வேறுபட்ட செயற்பரப்புகளில் சுவடி இயங்கிவருகின்றது.

நிறுவனத்தின் தோற்றம்[தொகு]

2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்குக் கல்வி வளங்களைத் தடையின்றிக் கிடைக்கச்செய்ய ஆரம்பிக்கப்பட்ட ’எண்ணிம நூலகச் செயற்திட்டமே’ இந் நிறுவனத்தின் தேவைப்பாட்டினை உணரச் செய்தது. இச் செயற்திட்டம் யாழ்ப்பல்கலைக் கழக மாணவர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், உயர்தர மாணவர்களிற்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பலரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் பொதுமக்களிடையே எண்ணிம ஆவணங்களைக் கையாளக்கூடிய உபகரணங்கள் பற்றாக்குறையால் பெரிதும் அணுகப்படவில்லை. அறிவார்ந்த சமூகத்தினை உருவாக்குவதை குறிப்பிலக்காகக் கொண்டு பணியாற்றும் ஒரு நிறுவனக்கட்டமைப்பின் தேவை மூன்று தசாப்த உள்நாட்டுப் போரிற்குப் பின்னரான அன்றைய சூழலில் பெரிதும் உணரப்பட்டது.

பிரதான பணிகள்[தொகு]

  • பொதுச்சுகநலத்துறை மேம்பாடு: காசநோய் விழிப்புணர்வுச் செயற்திட்டம், ஊட்டச்சத்து மிகுந்த உணவு தொடர்பான விழிப்புணர்வு, ஆரோக்கிய யாழ்ப்பாண நகரம்.
  • கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு: ஆங்கில ஆசிரியகளைப் பயிற்றுவித்தல், கூகிள் வகுப்பறைச் செயலி பற்றிய அறிவூட்டல், எண்ணிம கல்வி வளங்கள் மேம்பாடு.
  • காலநிலை மாற்றத்தினைத் தணித்தல்: உணவுப் புத்தாக்கக் கூடம் அமைத்தல், வடக்குக் கிழக்கு இயற்கைவழி வேளாண்மை முயற்சிகளிற்கான ஆதரவு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவடி_(நிறுவனம்)&oldid=3616810" இலிருந்து மீள்விக்கப்பட்டது