சி. உதயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னராசா உதயகுமார் ஈழத்து இளம் படைப்பாளிகளில் ஒருவர். கவிதை புனைகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுள்ளவர்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் கூனந்தோட்டம், சமரபாகுவைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யா/விக்னேஸ்வரா கல்லூரி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிகளிலும் உயர்தரத்தை யா/ சிதம்பராக் கல்லூரியிலும் பயின்றார்.

இவரது படைப்புக்கள் இதயஒலி(கையெழுத்துச் சஞ்சிகை),ஞானம், மல்லிகை,படிகள்,ஜீவநதி,இருக்கிறம்,செங்கதிர்,தினக்குரல் ,வீரகேசரி,உதயன்- சஞ்சீவி,வலம்புரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பணிபுரிகின்றார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • புள்ளிவிபரவியல் (1999)
  • வெற்றியுடன் - கவிதைத் தொகுப்பு (2009)
  • உடைந்த நினைவுகள் - கவிதைத் தொகுப்பு (2009)
  • செந்நீரும் கண்ணீரும் - சிறுகதைத் தொகுப்பு (2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._உதயகுமார்&oldid=2716268" இலிருந்து மீள்விக்கப்பட்டது